இவ்வுலக மக்களிலே அன்புகொள்ள – Ivvulaga Makkalile Anbukolla
இவ்வுலக மக்களிலே
அன்புகொள்ள வந்தார்
அந்த இறைவனின் அன்பினையே
ருசித்துப் பாராயோ நீ ருசித்துப் பாராயோ
இவ்வுலக மக்களிலே
அன்புகொள்ள வந்தார்
கடவுளின் சாயலிலே
படைக்கப்பட்டான் மனிதன்
கீழ்படியாமையால் இழந்தான்
கர்த்தர் சமூகந்தனை
ஆயினும் வாக்களித்தார்
இரட்சகரை நமக்கே
பாருலகை மீண்டும்
தம்மோடு ஒப்புரவாக்க
இவ்வுலக மக்களிலே
அன்புகொள்ள வந்தார்
படைத்தார் இப்பாருலகை
படைத்தே பராமரித்தார்
நாம் பாவமே செய்தாலும்
அழித்திடத் துணியவில்லை
படைப்பின் மீதினிலே
பரிவும் அன்பும் கொண்டார்
பாவத்தையே வெறுத்தார்
பாவியையோ நேசித்தார்
இவ்வுலக மக்களிலே
அன்புகொள்ள வந்தார்
இறைவன் நமக்களித்த
வாக்குதத்தங்கள் எல்லாம்
கிறிஸ்துவாம் உலக இரட்சகர்
ஆண்டவரில் ஆம் என்றும்
இறைவனுக்கு மகிமை
உண்டாகும்படி நம்மில்
இயேசு கிறிஸ்துவினால்
ஆமென் ஆமென் என்றேன்