அடோனாய் எங்கள் எஜமானனே – Adonai Engal Ejamananae
அடோனாய் எங்கள் எஜமானனே அடோனாய் என்றும் எங்கள் தகப்பனே
உம்மை துதிக்க துதிக்க வானம் எனக்காய் திறக்குதே உம்மை பாட பாட மகிமை மேகமாய் இறங்குதே
அடோனாய் – 6
நீர் உன்னதர்,உயர்ந்தவர்,
உலகை ஆள்பவரே – 3
1.என் கால்கள் இடறாமல் கண்மணிப்போல் காத்தவரே என் பாதையெல்லாம் நெய்யாய் பொழிய கிருபை தந்தவரே -2
எந்தன் வழிகளெல்லாம் என் கூட வந்தவரே
எங்கள் குறைகளெல்லாம் நிறைவாய் மாற்றி தந்தவரே
ஆராதனை (2) அப்பா உமக்கே
ஆராதனை (2) அன்பே உமக்கே
2. உந்தன் துதி சொல்ல என்னை தெரிந்து கொண்டவரே உந்தன் மகனாய் என்னையும் ஏற்று அபிஷேகம் தந்தவரே
வெண்கல கதவுகளை
எனக்காய் உடைத்தவரே
இரும்பு தாழ்பாளை முறித்து பொக்கிஷம் தந்தவரே
ஆராதனை (2) அப்பா உமக்கே ஆராதனை (2) அன்பே உமக்கே
3. அற்பமாய் இருந்த என்னை அடையாளமாய் மாற்றினீரே அகிலம் எல்லாம் உந்தன் ஒளியாய் ஏற்றி வைத்தவரே
எதிர்த்த மனிதர் முன்பே என் கொடி பறக்க செய்தவரே
ஏளனம் செய்தோர் முன் எனக்காய் பந்தியை வைத்தவரே
ஆராதனை (2) அப்பா உமக்கே ஆராதனை (2) அன்பே உமக்கே