மனம் இசைந்து அனைவரும் – Manam Isaindhu Anaivarum
மனம் இசைந்து அனைவரும் உடன் பிறப்பாய்
தினம் வாழ்வது சிறப்பானது!
நன்மையானது இன்பமானது
மண்வாழ்வினில் பேரழகு!
1. அது – ஆரோனின் தலைமீது பொழிந்து
அவனது தாடியில் வழிந்து
அங்கியில் குழைந்து தொங்கலில் இழைந்து
கீழ் வடிந்திடும் பரிமளம் போன்றது!
2. அது – எர்மோனின் மலையதன் மேலும்
சீயோனின் சிகரங்கள் மீதும்
மெல்லெனக் கவிந்து சில்லெனக் குவிந்து
தினம் படர்ந்திடும் பனியினைப் போன்றது!
3. இன்று – இனம்மொழி பொருள்நிலை கொண்டு
எத்தனை பிரிவுகள் உண்டு?
அன்பினில் பகிர்ந்துஇன்பமாய் இணைந்து
ஒன்றாய் இணைந்து வாழ்வதே அருளரசு!