காலமோ கொஞ்சகாலம் – KALAMO KONJAKALAM
காலமோ கொஞ்சகாலம் வருகையோ அதிசமீபம்
மனந்திரும்ப வேண்டும் மாய்மாலம் வேண்டாம்
கர்த்தரோ வந்திடுவார் வேகம்
1.வம்பு தும்பு பேசுறத நிறுத்துங்க
இயேசுவின் அன்ப கொஞ்சம் தியானிச்சுப்பாருங்க
மனம்திரும்புற வழிய நீங்க தேடுங்க
இயேசு வரப்போறாரு ரொம்ப ரொம்ப வேகங்க
2.சத்தியத்தை புரட்டி பேசும் கூட்டந்தான்
அட ரொம்ப ரொம்ப பெருகியேதான் போனாங்க
வேதத்த மட்டும் நீங்க நம்புங்க
அதுதான் பரலோக வழிய காட்டுங்க
3.புத்தியுள்ள ஸ்திரீகள்போல இருக்கணும்
இயேசு வருகையிலே பரலோகம் போகணும்
உலகத்துக்கு ஒத்த வேஷம் போடாதீங்க
அது பரலோகம் அழைத்துச்செல்ல மாட்டாதுங்க
4.மனம்போல வாழ்க்கை இனி வாழாதீங்க
உங்க கண்போன போக்கிலேயும் போகாதீங்க
நியாயத்தீர்ப்பு நாளு ஒன்னு வருதுங்க
மனம் திரும்பாட்டா அப்போ என்ன பண்ணுவீங்க