ஆயிரம் நாவுகள் போதாதையா – Ayiram navugal podhadhaiya
ஆயிரம் நாவுகள் போதாதையா – Ayiram navugal podhadhaiya Tamil Christian song Lyrics tune composed by Pr. Jayaraj. Living River Ministries
ஆயிரம் நாவுகள் போதாதையா
ஆண்டவரே நன்றி சொல்ல
நீர் செய்த நன்மைகள் ஏராளமே
ஒவ்வொன்றாய் நான் சொல்ல தான் கூடுமோ
மலை போன்ற துன்பம் என்னை சூழ்ந்த போதும்
பனி போல உருக வழி செய்தீரே
இருளான பாதை தடுமாறும் போதும்
ஒளியாக நீர் வந்து எனை மீட்டீரே
அலைமோதும் வாழ்வினில் துணையாகவே
அருகினில் வந்து என்னைக் காத்தீரே
தனியாக நானும் அலைந்திடும் போதும்
அரணான துணையாக நீர் வந்தீரே
தகப்பனும் தாயும் கைவிட்ட போதும்
கர்த்தாவே என்னோடு இருந்தவர் நீரே
உம்மை போல் வேறொரு தெய்வமில்லை
நீர் போதும் என்றும் நீர் போதுமே
ஆயிரம் நாவுகள் போதாதையா song lyrics, Ayiram navugal podhadhaiya song lyrics. Tamil Songs
Ayiram navugal podhadhaiya song lyrics in English
Ayiram navugal podhadhaiya
Aandavarae Nantri Solla – Aayiram Naavugal Pothathaiya
Neer seitha Nanmaigal Yeralamae
Ovvontraai naan Solla Thaan Koodumo
Malai Pontra Thunbam Ennai Soolntha pothum
Pani pola Iruga Vazhi Seitheerae
Irulana Paathai Thadumaarum Pothum
Oliyaga Neer Vanthu Enai meetteerae
Alaimothum Vaalvinil Thunaiyagavae
Aruginil Vanthu Ennai Kaatheerae
Thaniyaga Naanum Alaithidum Pothum
Arananan Thunaiyaga Neer Vantheerae
Thagappanum Thaayum Kaivitta Pothum
Karthavae Ennodu Irunthavar Neerae
Umami pol Veroru Deivamillai
Neer Pothum Entrum Neer Pothumae
பாடல் வரிகள் மிகவும் அருமை!
குரல் வளம் மிகவும் இனிமை!
இசையமைப்பு பழமையிலும் புதுமை!
அர்த்தத்தை புரியவைப்பது எளிமையிலும் எளிமை!
உணர்ந்து பாடும்போது ஆவிக்குரிய முதுமை!
உணராமல் பாடினால் உள்ளத்தில் வெறுமை!
கூட்டி கழித்து சொன்னால் இது தேவனோடு இனிமையான தனிமை