Yesuvin Namathil song lyrics – இயேசு நாமத்தில்
Yesuvin Namathil song lyrics – இயேசு நாமத்தில்
அவர் நாமத்தில்
இயேசு நாமத்தில்
கூடிவந்துள்ளோம்
ஒருமனதோடு முழுமனதோடு
அவர் நாமம் உயர்த்துவோம்
இயேசுவின் வல்ல நாமம் உயர்த்திடுவோம்.
அவர் நாமத்தில்
இயேசு நாமத்தில்
கூடிவந்துள்ளோம்
கரம் உயர்த்தியே சிரம் தாழ்த்தியே
பணிந்து துதிக்கிறோம்
இயேசுவின் வல்ல நாமம் துதித்திடுவோம்
ராஜாக்களிலும் பிரபுக்களிலும்
எல்லா நாமத்திலும் மேலான நாமம்
எல்லாவற்றிலும் எல்லோரிலும்
எல்லா நாமத்திலும் மேலான நாமம்
இயேசுவே
கிருபையால் விசுவாசத்தால்
மீட்பை பெற்றோம்
என் சித்தம் அல்லவே எந்தன் வாழ்விலே
உந்தன் சித்தம் நிறைவேற்றிடும்
குறித்த காலத்தில் நிறைவேற்றிடும்
ராஜாக்களிலும் பிரபுக்களிலும்
எல்லா நாமத்திலும் மேலான நாமம்
எல்லாவற்றிலும் எல்லோரிலும்
எல்லா நாமத்திலும் மேலான நாமம்
இயேசுவே
பெலவீனராய் உம்மை நோக்கியே நாங்கள் வந்து நிற்கிறோம்
எங்கள் பெலத்தினால் கூடாதைய்யா
தேவ ஆவியாலே ஆகும்
சர்வவல்லவரின் ஆவியாலே ஆகும் .
ராஜாக்களிலும் பிரபுக்களிலும்
எல்லா நாமத்திலும் மேலான நாமம்
எல்லாவற்றிலும் எல்லோரிலும்
எல்லா நாமத்திலும் மேலான நாமம்
இயேசுவே
கட்டுகள் உடைந்தது
என் சாபங்கள் தொலைந்தது
உம் தயவினால் தைரியமாய் தேவபிரசன்னத்தில் பிரவேசித்தோம்
உம் தழும்பினால் குணமாகிறோம்
அவர் சிலுவையால் நான் நீதிமான்
அவர் சத்தியம் நம் விடுதலை
வல்ல இயேசுவின் நாமத்தில்…
ராஜாக்களிலும் பிரபுக்களிலும்
எல்லா நாமத்திலும் மேலான நாமmae
எல்லாவற்றிலும் எல்லோரிலும்
எல்லா நாமத்திலும் மேலான நாமmae
இயேசு