Yesu Deva Irakkam seiyumae song lyrics – இயேசு தேவா இரக்கம் செய்யுமே
Yesu Deva Irakkam seiyumae song lyrics – இயேசு தேவா இரக்கம் செய்யுமே
இயேசு தேவா இரக்கம் செய்யுமே
இயேசு ராஜா இரக்கம் செய்யுமே -2
எங்கள் தேசத்தின் பெண்களுக்கு
எங்கள் குடும்பத்தின் குழந்தைகட்கு – 2
இயேசு தேவா இரக்கம் செய்யுமே இயேசு ராஜா இரக்கம் செய்யுமே – 2
சர்வ சிருஷ்டிகரே
சர்வ வியாபி நீரே
சர்வ ஞானி நீரே
உம் பாதத்தில் கெஞ்சுகிறோம்
சர்வ சிருஷ்டி கரே
சர்வ வியாபிநீரே
சர்வ ஞானி நீரே
உம் சமுகத்தில் கதறுகிறோம்
உம் சமுகத்தில் கதறுகிறோம் உம் சமுகத்தில் கதறுகிறோம்
1.எங்கள் தேசத்தின் பெண்களுக்கு
எங்கள் குடும்பத்தின் குழந்தைகட்கு
எங்கள் தேசத்தின் பெண்களுக்கு எங்கள் குடும்பத்தின் குழந்தைகட்கு
அக்கினி மதிலாய் இரும்
உந்தன் கண்மணி போல் காத்தருளும்- தேவா
அக்கினி மதிலாய் இரும் உந்தன் கண்மணி போல் காத்தருளும்
- எங்கள் தேசத்தின் பெண்களுக்கு எங்கள் குடும்பத்தின் குழந்தைகட்கு
எங்கள் தேசத்தின் பெண்களுக்கு எங்கள் குடும்பத்தின் குழந்தைகட்கு
பலத்த அரணாய் இரும்
உந்தன் சிறகுகளில் மறைத்தருளும்- தேவா
பலத்த அரணாய் இரும்
உந்தன் சிறகுகளில் மறைத்தருளும்
3.எங்கள் தேசத்தின் பெண்களுக்கு
எங்கள் குடும்பத்தின் குழந்தைகட்கு
எங்கள் தேசத்தின் பெண்களுக்கு எங்கள் குடும்பத்தின் குழந்தைகட்கு
வலப்பக்க நிழலாய் இரும் ஒரு சேதமின்றி காத்தருளும்- தேவா
வலப்பக்க நிழலாய் இரும்
ஒரு சேதமின்றி காத்தருளும்
- எங்கள் தேசத்தின் ஆண்களுக்கு எங்கள் குடும்பத்தின் குழந்தைகட்கு
எங்கள் தேசத்தின் ஆண்களுக்கு எங்கள் குடும்பத்தின் குழந்தைகட்கு பரிசுத்த தேவனாய் இரும் உந்தன் பரிசுத்தத்தால் நிறைத்தருளும்- நீரே
பரிசுத்த தேவனாய் இரும் உந்தன் பரிசுத்ததால் நிறைத்தருளும் இயேசு தேவா இரக்கம் செய்யுமே இயேசு ராஜா இரக்கம் செய்யுமே இயேசு தேவா இரக்கம் செய்யுமே இயேசு ராஜா இரக்கம் செய்யுமே
உந்தன் சமுகத்தில் Undhan Samugaththil Tamil Christian Song புதிய தமிழ் கிறிஸ்தவ பாடல்.
சர்வ வல்லமையுள்ள தேவனும் கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கே மகிமை உண்டாவதாக. ஆமென்.
இந்நாட்களில் பெண்கள், பெண்குழந்தைகள் பாதுகாப்பற்ற நிலைமையில் அநேக
வன்கொடுமைகளையும் ஆபத்துக்களையும் சந்திக்கிறார்கள், மரித்தும் போகிறார்கள்.
இந்த நிலைமை இனி எந்தப் பெண்ணுக்கும் எந்தப் பெண்குழந்தைகளுக்கும் வராமல் காக்கும்படி ஜீவனுள்ள தேவனின் பாதத்தில், அவர் சமுகத்தில் மன்றாடி ஜெபிக்கும் போது தேவன் இந்தப் பாடலை எழுதும்படியான கிருபையைத் தந்தார்.
பெண் குழந்தைகளும், வாலிபப் பெண்களாய் இருக்கிறவர்களும், பெண் பிள்ளைகளுக்குத் தாயாக இருப்பவர்கள் யாவரும் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தின் பெண்களுக்கும் இந்தப் பாடலில் சொல்லப்பட்டபடியான தேவ பாதுகாப்பை தேவனிடத்தில் கேட்டுப் பெற வேண்டும், அனுதினமும் ஆபத்தில்லா பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று வேண்டுதல் செய்து எல்லாப் பெண்களுக்காகவும் இந்தப் பாடலை சமர்ப்பிக்கிறேன்.
பாதுகாப்புக்காக தேவன் கொடுத்துள்ள அநேக வாக்குத்தத்தங்களில் சிலவற்றையும் தேவனாலே அற்புதமாய் பாதுகாக்கப்பட்ட வேத பாத்திரங்களான சில நபர்களையும் நினைவு கூர்ந்து, அந்த தேவ வார்த்தைகளைக் கொண்டு இந்த பாடல் வரிகள் எழுதப் பட தேவன் கிருபை செய்தார்.
சர்வவல்ல தேவனையும் அவரது வார்த்தைகளையும் நம்பும்போது நமக்கும் நம் குடும்பத்திற்கும் நிச்சயமாகவே ஒரு அற்புதமான பாதுகாப்பு உண்டாயிருக்கும் என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.