Virunthaga Varum Enthan Iraiva song lyrics – விருந்தாக வரும் எந்தன் இறைவா
Virunthaga Varum Enthan Iraiva song lyrics – விருந்தாக வரும் எந்தன் இறைவா
விருந்தாக வரும் எந்தன் இறைவா – அரும்
மருந்தாக என்னில் வந்து குணம் தா
பெரும் பாரம் சுமப்போரே வாரும் – என்ற
பரிவான குரல் கேட்டு வந்தேன்
ஆசைகள் தேவைகள் ஆயிரம் கூப்பிட ஓடுகின்றேன் – என்
ஆதரவெங்கே ஆறுதல் எங்கே தேடுகிறேன்
பாலை நிலத்தில் வாடிய மாந்தர்
பசியாற உணவூட்டி துயர்தீர்த்தவா
நீ தரும் நிலையான உணவு – அதை
உண்டாலே பல்வேறு பசிதாகம் போகும்
ஆசைகள் தேவைகள் ஆயிரம் கூப்பிட ஓடுகின்றேன் – என்
ஆதரவெங்கே ஆறுதல் எங்கே தேடுகிறேன்
நோய் நொடியாலே வாடிய மாந்தர்
பயம்போக்கி குணமாக்கி துயர்தீர்த்தவா
உனைத் தொடும் நேரம் நற்கருணை – என்
உடல் உள்ளம் தனைவாட்டும் பிணிபோக்க வா
ஆசைகள் தேவைகள் ஆயிரம் கூப்பிட ஓடுகின்றேன் – என்
ஆதரவெங்கே ஆறுதல் எங்கே தேடுகிறேன்
Virunthaga varum enthan Iraiva Tamil communion song lyrics