Vetkathuku Bathilaaga Kannirukku song lyrics – வெட்கத்திற்கு பதிலாக கண்ணீருக்கு

Deal Score0
Deal Score0

Vetkathuku Bathilaaga Kannirukku song lyrics – வெட்கத்திற்கு பதிலாக கண்ணீருக்கு

வெட்கத்திற்கு பதிலாக கண்ணீருக்கு பதிலாக
நிந்தைக்கு பதிலாக மகிழ்ச்சியாக்கினீர் -(2)
நன்றி சொன்னாலும் போதாதையா வாழ்நாளெல்லாம் தீராதையா
நன்றி சொல்ல வார்த்தை இல்லை – உமக்கு (2)

  1. மனுஷ வார்த்தையால உடஞ்சி போயிருந்தேன் உங்க வார்த்தையால தூக்கி சுமந்திங்க -(2)
    தூக்கி விட ஒருவர் இல்ல தாங்கிட எவருமில்லை உங்களத்தான் நம்பி இருக்கேன் வேற யாரும் தேவையில்லை (இல்லை)-2
  2. நெருக்கத்தின் பாதையில நொறுங்கிப் போயிருந்தேன் நெருக்கமாய் வந்து என்னை ஆசீர்வதிச்சீங்க-(2)
    என் வாழ்க்கை முடிஞ்சதென்று
    நான் நினைச்ச வேளையிலே நான் இருக்கேன் என்று சொல்லி கைபிடிச்ச நேசர் நீங்க (நீர்) -(2)
  3. மனங்கசந்து அழுதபோது கைப்பிடிச்சீங்க ஒன்றுமில்லா வேளைகளில் உதவி செஞ்சீங்க -(2)
    குப்பையில் கிடந்த என்னை கன்மலையில் நிறுத்தினீங்க
    என் கால்கள் சறுக்கும் போது உம் கிருபை தந்தீங்க
Jeba
      Tamil Christians songs book
      Logo