வழி என்று நடந்து நான் – Vazhi endru Nandanthu Naan song lyrics

Deal Score+1
Deal Score+1

வழி என்று நடந்து நான் – Vazhi endru Nandanthu Naan song lyrics

வழி என்று நடந்து நான்
குழியில் கிடக்கிறேன்
விடை என்று நினைத்ததும்
விடுகதை ஆனதே
புதிதென்று நினைத்ததும்
புதிராய் போனதே
கதி என்று வாழ்ந்திட
மனமும் இல்லையே
காற்று வீசும் திசையில் சாய்கிறேன்
காலப்போக்கில் களைந்து போகிறேன்
சுவாசம் உண்டு வாசம் இல்லையே
விதி என்று நான் வாழ்கிறேன்
விதி என்று நான் வாழ்கிறேன்

போராட்டமே என் வாழ்க்கையோ
புயலோடுதான் எதிர்காலமோ (2)
கரை காணமல்
நடுகடலில் தவிக்கும் தோணி போல்
தெளிவின்றி வாழ்க்கையானதோ
கரை காணமல்
நடுகடலில் தவிக்கும் தோணி போல்
நாட்கள் ஆனதோ

உம் அன்பு என்னை புதிதாக்குதே
என் பாவத்தை அது நீக்குதே (2)
சிறை வாழ்வும் மாறி
விடுதலை காண்கிறேன்
புது வானில் சிறகை விரிக்கிறேன்
சிறை வாழ்வும் மாறி
விடுதலை காண்கிறேன்
வானில் சிறகை விரிக்கிறேன்

வழி என்று சொன்னவர்
என் முன்னே செல்கிறார்
விடை நானே என்றென்னை
விடுதலையாக்கினார்
புதிதான ஜீவியம்
என்னை மாற்றுதே
தெளிவான பாதையை
கண் முன் காண்கிறேன்
நீர்கள் அண்டை வேர்கள் ஊன்றினேன்
என் காலத்தில் நல்கணியை காண்கிறேன்
இலையுதிர் காலம் இனியும் இல்லையே
செய்வதெல்லாம் வாய்க்குதே

Vazhi endru Tamil Christian Song Paul H Rufus CROSSINGS

Jeba
      Tamil Christians songs book
      Logo