Vayalveli Malagalaium song lyrics – வயல்வெளி மலர்களையும்
Vayalveli Malagalaium song lyrics – வயல்வெளி மலர்களையும்
வயல்வெளி மலர்களையும் – அந்த
வானத்துப் பறவையையும்
காப்பது எனது இறைவனென்றால்
என்னை அவர் மறப்பாரா – தன்னுடைய
பிள்ளைதனை மறப்பாரா
இது நிச்சயம் என்றும் சத்தியம் – 2
தாய் மறந்தாலும் அவர் மறவார் – தன்
கண்ணின் மணி போல என்னைக் காப்பார்
எரிகின்ற சுடர்தனையே – அவர்
அணைந்திட விடமாட்டார்
வளைந்து தள்ளாடும் நாணலையே – அவர்
முறிந்திட விடமாட்டார் – நானின்று
அழிந்திட விடுவாரா
இது நிச்யம் என்றும் சத்தியம் – 2
தாய் மறந்தாலும் அவர் மறவார் – தன்
கண்ணின் மணி போல என்னைக் காப்பார்
வறுமையின் வலிகளையும் – வரும்
நோய்களின் வேதனையும்
உணர்ந்தவர் எனது இறைவனென்றால்
என் மனம் தெரியாதா – என்னுடைய
கவலைகள் புரியாதா
இது நிச்யம் என்றும் சத்தியம் – 2
தாய் மறந்தாலும் அவர் மறவார் – தன்
கண்ணின் மணி போல என்னைக் காப்பார்