வங்கக்கடல் வந்து தங்கக் குரல் – Vanga kadal Vanthu Thanga Kural
வங்கக்கடல் வந்து தங்கக் குரல் – Vanga kadal Vanthu Thanga Kural
வங்கக்கடல் வந்து
தங்கக் குரல் கொண்டு
தெம்மாங்கு பாட்டொன்னு பாடுதம்மா – (2)
சின்னக்குயில் ஒன்று
அன்னை முகம் கண்டு
ஆனந்தம் கொண்டாடத் தேடுதம்மா
வைகறை மேகங்கள் வாழ்த்துதம்மா..
அம்மா அம்மா
அழகுத் தாயம்மா..
அன்பே அன்பே
உனது பேரம்மா..
- வானிலே ஆ.. தேன் நிலா ஆ..
வானிலே அந்த தேன் நிலா
வலம் வருவது போல
என் வாழ்விலே ஒளி வீசிடும்
வானம் நீயம்மா
ஊனிலே அந்த இறைவனா
வந்து தவழ்ந்தது
உந்தன் மடியிலா
ஞானமே உன்னில் உறைந்ததால்
புது வேதம் பிறந்ததா..
உன்னையே எண்ணியே உருகிப் பாடுவேன்
அன்னையே இல்லையேல் அன்பு ஏதம்மா..
இது பிள்ளை தாய்க்கு பாடும் பாட்டம்மா… - பாவமே ஆ…. பணிந்ததா ஆ..
ஆதிமனிதன் செய்த பாவம்
அழிக்க வந்தவளே
அந்த ஆணவத்தின் தலைவன்
அவனை மிதிக்க வந்தவளே
தேடித்தேடி தேயும் வாழ்வில்
நம்பிக்கை நீயே
உன்னைத்தேடும் எனது
தேவைகளைப் பூர்த்தி செய்பவளே…
அன்பெனும் ஆடையில் என்னை மூடவா..
அன்புக்கு சாட்சியாய் பாரில் வாழுவேன்..
இந்த பூமி தந்த
புதையல் நீயம்மா
Vanga kadal Vanthu Thanga Kural song lyrics in English
Vanga kadal Vanthu Thanga Kural