Vallamai Thaarum Aaviyanavare – வல்லமை தாரும் ஆவியானவரே

Deal Score0
Deal Score0

Vallamai Thaarum Aaviyanavare – வல்லமை தாரும் ஆவியானவரே Tamil Christian song lyrics, written, Tune & Sung by Pr. F .Paul Titus

வாரும் வாரும் வல்லமையை தாரும் ஆவியானவரே
உம்மை போலவே என்னையும் மாற்றும் அன்பின் சிகரமே

1.அக்கினி நாவாய் என்மேல் வாரும் அபிஷேகம் செய்திடவே
பலத்த காற்றாய் என்மேல் வீசும் பெலனை தந்திடவே

2.புறாவைப் போல என்மேல் இறங்கும் கபடம் நீக்கிடவே
நான் செல்லும் பாதையை நீரே சொல்லும் வாழ்க்கையில் (ஊழியத்தில்) வென்றிடவே

3.இடைவிடாமல் விழித்து ஜெபிக்க தடைகள் தகர்த்திடுமே
இரவு பகலாய் வேதம் தியானிக்கும் தாகம் தந்திடுமே

4.இயேசுவைப் பற்றி பிறருக்கு சொல்ல தைரியம் தந்திடுமே
உந்தன் வசனத்தைப் போல சாட்சியாய் வாழ வல்லமை வழங்கிடுமே

5.சோதனை வந்தால் சாதனை படைக்க கிருபை கொடுத்திடுமே
எது நேர்ந்தாலும் இயேசுவை விட்டு பிரியா வரம் கொடுமே

6.துன்பத்தால் துடிக்கையில் துயரம் துடைத்திடும் தேற்றரவாளனே (தேற்றரவாளரே)
நான் இடிந்து விழுந்து கிடக்கும் போது என்னை கட்டி எழுப்பிடுமே

7.வல்லமை ஞானம் வரங்கள் கனிகள் எல்லாம் உடையவரே
இவற்றை நிறைவாய் இப்போ தாரும் கெஞ்சி வேண்டுகிறேன்

Vallamai Thaarum Aaviyanavare song lyrics, வல்லமை தாரும் ஆவியானவரே song lyrics, Tamil songs

Vallamai Tharum Aaviyanavare song lyrics In English

Vaarum Vaarum Vallamaiyai Thaarum Aaviyanavarae

Jeba
      Tamil Christians songs book
      Logo