Vaan Naduvae Yesu song lyrics – வான் நடுவே இயேசு

Deal Score0
Deal Score0

Vaan Naduvae Yesu song lyrics – வான் நடுவே இயேசு

வான் நடுவே இயேசு நீர் வருவீர் உம்மோடேன்னை சேர்த்துக்கொள்வீர் – இனி வரும்
ஒர் பொழுதில் நீர் வருவீர் உம்மோடேன்னை அழைத்துச்செல்வீர்
தயவாய் நினைத்து
எமைதேடி நீர் வந்தீர்
கிருபை பொழிந்து
உமக்காக தெரிந்து கொண்டீர்
உலக தோற்றம் முதலே …..
எமக்காய் அடிக்கபட்டீர்…..

தாயின் கருவினிலே எம்மை பாதுகாத்தவரே
அந்த பாதுகாப்பை இன்றும் எம்மில் தொடரச்செய்பவரே உலகம் முடியும் வரைக்கும்
உந்தன் அன்பை தருவீர்
உம் உள்ளங்கையில் வரைந்தெம்மை காத்துக்கொண்டீர்
எங்கள் கால்கள் கல்லில் இடறாமல் தூக்கிச்செல்வீர்
என்ன நன்றி சொல்வேன் வார்த்தை இல்லை தேவா

இந்த உலகம் நிலைப்பதில்லை ஒரு நாள் அழிந்து போய்விடுமே
வார்த்தையானவரே உம் வார்த்தை என்றும் நிலைத்திடுமே
வானம் பூமி அழியும்
உலகம் வெந்து உருகும்
நாமோ என்றால் உம்மோடு மகிழ்ந்திருந்து
தினம் வாழ்த்துப்பாடி
துதிகளை செலுத்திடுவோம் இயேசு இராஜா நீரே
இராஜரீகம் செய்வீர்

Vaan naduvey tamil christian song lyrics

Jeba
      Tamil Christians songs book
      Logo