Unnodu en vazhkai song lyrics – உன்னோடு என் வாழ்க்கை
Unnodu en vazhkai song lyrics – உன்னோடு என் வாழ்க்கை
உன்னோடு என் வாழ்க்கை அழகானதே விளக்கோடு ஒளி போன்று சுடர் வீசுதே ஆழியில் கண்டெடுத்த புதையல் போலவே எனை நானும் கண்டேன் உந்தன் கரங்களில்
அழகும் நீ அறிவும் நீ ஆற்றலும் நீ அடைக்கலம் நீ
1) மழை இல்லா நிலம்போன்று வேரில்லா மரம் போன்று என் வாழ்வு காய்கின்றதே நிலவில்லா வீண் போன்று தடையில்லா புயல் போன்று என் நாட்கள் கழிகின்றதே தினம் தேடினேன் உனை தேடினேன் உன்னை காண்கின்றேன் உன் வார்த்தையால் உயிர் வாழ்கின்றேன்
2) நதி தேடும் கடல் போல மனம் வீசும் மலர் போல உனை காண்கிறேன் நிறைவாகிறேன் நலம் நல்கும் உன் பார்வை திடம் தரும் உன் வார்த்தை உன் பணியில் அழைக்கின்றதே தினம் மாறினேன் உருமாறினேன் உன்னாலே உயர்வாகினேன் உன் கருணையால் உயிர் வாழ்கின்றேன்