Unnatharin Kavalil Ullavarkal naam song lyrics – உன்னதரின் காவலில் உள்ளவர்கள்
Unnatharin Kavalil Ullavarkal naam song lyrics – உன்னதரின் காவலில் உள்ளவர்கள்
உன்னதரின் காவலில் உள்ளவர்கள் நாம்
வல்லவரின் நிழலில் வாழ்வோர் நாம்
எனவே நாம் சொல்லுவோம் – நன்கு
உணர்ந்து மகிழ்ந்து உரக்கச் சொல்வோம்.
கோரஸ்:
நீரே எம் புகலிடம் ஆண்டவரே
நீரே எம்மைக் காக்கும் அரண்
நாங்கள் நம்பிடும் இறைவன் நீர் தாமே
நீர் தாமே உன்னதரே, வல்லவரே நீர் தாமே
- வஞ்சகர்கள் விரிக்கும் வலையினின்றும்
கொன்றழிக்கும் கொள்ளை நோயினின்றும்
அவரே நம்மைக் காப்பார் – தம்
சிறகுகளால் நம்மை அரவணைப்பார் - ஆயிரம் போர்கள் நடந்தாலும் – பல
ஆயிரம் பேர்கள் விழுந்தாலும்
எதுவும் அணுகாது – நம்மை
எந்த ஒரு தீமையும் நெருங்காது. - அழைத்திடும் போது பதில் அளிப்பார் – நாம்
அல்லலுறும் நேரம் உடனிருப்பார்
நீடிய வாழ்வளிப்பார் – என்றும்
நிலையாய் நின்றிடும் நிறைவளிப்பார்
Psalm 91 song lyrics