உமக்கு சமானம் இல்லையே-Umakku Sammanm Iliyae

உமக்கு சமானம் இல்லையே (2)
வானம் விரிக்கத்தக்க
பூமி படைக்கத்தக்க
வேறொருவர் இல்லையே – சமானம்

எந்த சாயலுக்கும் உம்மை ஒப்பாக்கி
பசும்பொன்னினாலே உம்மை
செய்ய கூடுமோ
வானமோ உமது சிங்காசனம்
பூமியோ உமது பாதபடி – சமானம்

தாயின் கருவிலே என்னை ஏந்திக்கொண்டு
உம் கரத்தால் தினமும்
தாங்கி கொண்டீர்
என் அரைவயதில் என்னை காப்பவரே
என் முதிர்வயதில் என்னை சுமப்பவரே – சமானம்

We will be happy to hear your thoughts

      Leave a reply