Thirumbi Varukintrean Thanthaiyae song lyrics – திரும்பி வருகின்றேன் தந்தையே
Thirumbi Varukintrean Thanthaiyae song lyrics – திரும்பி வருகின்றேன் தந்தையே
திரும்பி வருகின்றேன் – தந்தையே
திருந்தி வருகின்றேன் – எந்தன்
தந்தை உன் பாதத்தில் வீழ்வேன் – இனி
என்றும் உன் இல்லத்தில் வாழ்வேன்
உந்தன் அன்பை உதறி எறிந்து
எங்கோ ஓடினேன்
உனது இல்லத்தின் நிறைவை மறந்து
எதையோ தேடினேன்
வாழ்வை நானே அழித்தேன் – நெஞ்சில்
நிம்மதி இழந்து தவித்தேன்
அலைந்து திரிந்தேன் அனைத்தும் இழந்தேன்
துயரில் மூழ்கினேன்
அழுது ஓய்ந்து அமரும் போது
உன்னை நினைக்கிறேன்
உனக்கு நானும் இழைத்த துயரம்
எண்ணித் துடிக்கிறேன்
உந்தன் இல்லம் நோக்கி – எந்தன்
உள்ளம் ஏங்கப் பார்த்தேன்
இதயம் வருந்தி முழுதும் திருந்தி
எழுந்து வருகின்றேன்
Thirumbi Varukintrean Thanthaiyae Tamil Lent Song lyrics