??தேன் இனிமையிலும் ஏசுவின் நாமம் திவ்விய மதுர மாமே;-அதைத் ??
தேடியே நாடி ஓடியே வருவாய், தினமும் நீ மனமே.??
.
சரணங்கள்
1. காசினிதனிலே நேசமதாகக் கஷ்டத்தை உத்தரித்தே;-பாவக்
கசடதை அறுத்துச் சாபத்தைத் தொலைத்தார்; கண்டுணர் நீ, மனமே.
.
2. பாவியை மீட்கத் தாவியே உயிரைத் தாமே ஈந்தவராம்;-பின்னும்
நேமியாம் கருணை நிலைவரமுண்டு; நிதம் துதி, என் மனமே.
.
3. காலையில் பனிபோல் மாயமாய் உலகம் உபாயமாய் நீங்கிவிடும்;-என்றும்
கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு கருத்தாய் நீ, மனமே.
.
4. துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல துணைவராம் நேச ரிடம்;-நீயும்
அன்பதாய்ச் சேர்த்தால் அணைத்துனைக் காப்பார்; ஆசைகொள் நீ, மனமே.
.
5. பூலோகத்தாரும் மேலோகத்தாரும் புகழ்ந்து போற்று நாமம்;-அதைப்
பூண்டுகொண் டால்தான் பொன்னகர் வாழ்வில் புகுவாய் நீ, மனமே.
இயேசுவின் நாமமே திருநாமம் – முழு
இருதயத்தால் தொழுவோம் நாமும்.
1. காசினியில் அதனுக் கிணையில்லையே – விசு
வாசித்த பேர்களுக்குக் குறையில்லையே.
2. இத்தரையில் மெத்தவதி சயநாமம் – அதை
நித்தமும் தொழுபவர்க்கு ஜெயநாமம்.
3. உத்தம மகிமைப் பிரசித்த நாமம் – இது
சத்திய விதேய மனமொத்தநாமம்.
4. விண்ணவரும் பண்ணுடன் கொண்டாடும்நாமம் – நமை
அண்டிடும்பேய் பயந்தோடு தேவநாமம்.
5. பட்சமுள்ள ரட்சைசெயு முபகாரி – பெரும்
பாவப்பிணிகள் நீக்கும் பரிகாரி.
தேன் இனிமையிலும் ஸ்வரங்கள் :
1.கமபத பா மக ரிகமப மா கரி
சரிகம கா ரிச ச நி ப சா
2.பநிசா நிசரீ சரிகா ரிகமா
சநிதபமகரிச சரிகமபா
3.கமபாமகரிச சரி கம பா
பதபா மபமா கமகா கமபா
ச ரீ ரி கமபா | சநிதப கமபா
கமபா | ரிகமா |சரிகா |நிசரீ
பநிசா | நிசரீ |நிசரீ |சரிகா |
சரிகா | ரிகமா | ரிகமா| கமபா|
ம த ப |க ப ம | ரி ம க |ச க ரி | நி ச ரி ப |
ச நி ப நி ச நி சரி | ச ச க ரிகமபா |
நிசரி சாரிச நிசாசா| சா ரிக ரீ க ரி |ச ரீ ரீ
ரி க ரி க ம க ரி கா கா பா பாபா
ச நி த ப க பா பா | ச த ப ம க பா |
ச த ப மக தப மக ரி |ம க ரி ச நி ||