Thanthaiyae Engalai Manniyum song lyrics – தந்தையே எங்களை மன்னியும்

Deal Score0
Deal Score0

Thanthaiyae Engalai Manniyum song lyrics – தந்தையே எங்களை மன்னியும்

முழு முதல் கனியாய் பாவம் சூழ வாழ்வை இழந்தாயே மனிதா ..
முகமதில் தெரிய முள் கிரீடம் தந்தாய் அன்பின் சுமைதானே மனிதா.. – முழுமுதற் கனியாய்
ஆன்மீக வாழ்வின் இலையுதிர் காலமாய் என்னையே தந்தேனே

தந்தையே எங்களை மன்னியும் உமக்கு எதிராய் பாவம் செய்தோம் தந்தையே எங்களை மன்னியும் எம் பாவத்தால் உமை இழந்தோம்

1) உடன் இருந்தவன் காட்டிக் கொடுக்க காயங்களால் அடித்து உதைக்க சிதையாத அன்பை வெளிகாட்டினேன் உனக்காகவே மகனே உனக்காகவே மகளே
கழுகின் இறகாய் நான் சுமந்தேன் நீ சாட்டையால் என்னை அடிக்கச் செய்தாய் நிழலாய் உந்தன் அருகிருந்தேன் என் தலையில் முள்முடி அணியச் செய்தாய் உன் பாவம் போக்க என் ரத்தம் தந்தேன் உனக்காய் என் மகனே உனக்காய் என் மகளே

2) சொல்லின் வன்மம் கயவனாய் மாற்ற சிலுவை சுமைதான் உடலை நசுக்க பிதாவின் சித்தத்தை வெளிகாட்டினேன் உனக்காகவே மகனே உனக்காகவே மகளே
சமநிலையாய் உன்னை அன்புசெய்தேன்
நீ சதி திட்டம் தீட்டி சாவை தந்தாய் கண்ணின் இமைப்போல் உன்னை காத்தேன்
நீ ஆணியால் கை கால் சிதைய வைத்தாய்
நிலை வாழ்வு காண உணவாக தந்தேன் உனக்காய் என் மகனே உனக்காய் என் மகளே

தந்தையே எங்களை மன்னியும் உன் ரத்தத்தால் குணமாகினோம் தந்தையே எங்களை மன்னியும் இனி பாவம் செய்ய மாட்டோம்

Mulu muthar kaniyaai tamil catholic Christian lent song lyrics

    Jeba
        Tamil Christians songs book
        Logo