தங்கக்களஞ்சியமே தங்கமே – Thanga Kalanjiyame Thangamae

Deal Score+1
Deal Score+1

தங்கக்களஞ்சியமே தங்கமே – Thanga Kalanjiyame Thangamae

ஆரிரோ… ஆரிராரோ… ஆரிரோ… ஆரிராரோ…
தங்கக்களஞ்சியமே தங்கமே கண்ணுறங்கு
பூமியே சொந்தங்கொள்ளும் மன்னவா கண்ணுறங்கு
எந்தன் மடி நீ பிறக்க என்ன தவம் நான் செய்தேன்!
என்னையாளும் மன்னவனே உன்னைக் கொஞ்சும் பாக்கியமே!

1 அன்னை தரும் முத்தத்திலே மொத்தமாகும் எந்தன் அன்பு
உன்னைத் தொடும் நெஞ்சத்திலே நித்தமாகும் உந்தன் அருள்
என்றும் அள்ளக் குறையாத பெருங்கடலே உமதுள்ளம்
இன்று அன்னை மடியில்வந்து அன்பைத் தேடும் விந்தையென்ன!
எந்தன் மடி நீ பிறக்க…

2 அன்னை உந்தன் பிள்ளையன்றோ எந்தன் பிள்ளை ஆவதேனோ!
சித்தம் என்று எண்ணியதால் சத்தம் இன்றி வந்தாயோ!
விண்ணில் யாவும் கொண்டபோதும் மண்ணில் வாழ வந்ததேனோ!
பாசமெல்லாம் வேண்டுமென்றே பாலகனாய் வந்தாய் போலும்!
எந்தன் மடி நீ பிறக்க

Thanga Kalanjiyame Thangamae song lyrics in English

Aarariro Aariro aariro aariraro
Thanga Kalanjiyame Thangamae Kannurangu
boomiyae sonthankollum mannava kannurangu
enthan madi nee pirakka enna thavam naan Seithean
ennaiyaalum mannavanae unnai konjum baakkiymae

1.Annai tharum muththathilae moththamagum enthan anbu
unnai thodum nenjathilae niththamagum unthan aruk
entrum alla kuraiyatha perungadalae umathullam
intru annai madiyilvanthu anbai theadum vinthaiyenna – Enthan madi

2.Annai unthan pillaiyantro enthan pillai aavatheano
Siththam entru enniyathaal saththam intri vanthayo
vinnil yaavum kondapothum mannil vaala vantheano
paasamellam vendumentrae paalganaai vanthaai polum – Enthan madi

    Jeba
        Tamil Christians songs book
        Logo