Thaai Unnai Maranthalum Alaithavar song lyrics – தாயுன்னை மறந்தாலும்
Thaai Unnai Maranthalum Alaithavar song lyrics – தாயுன்னை மறந்தாலும்
தாயுன்னை மறந்தாலும்
அழைத்தவர் உன்னை மறப்பாரோ
நண்பர்கள் வெறுத்தாலும்
படைத்தவர் உன்னை வெறுப்பாரோ
கலங்கிடாதே மகனே கைவிடவே மாட்டார்
சோர்ந்திடாதே மகளே சுமைகளைத் தாங்கிடுவார்
பிறர் உன்னை வெறுத்தாலும்
உரிமையை மறுத்தாலும்
நோய் நொடி வேதனையில்
நொந்து மடிந்தாலும்
இறைவன் உன்னைத் தேற்றுவார்
உறவுகள் பிரிந்தாலும்
உபத்திரம் தொடர்ந்தாலும்
வறுமையில் வன்முறையில்
நொறுங்குண்டு வீழ்ந்தாலும்
இறைவன் உன்னைத் தேற்றுவார்