Sooshai Thanthaiyae Engal Punitharae song lyrics – சூசை தந்தையே எங்கள் புனிதரே
Sooshai Thanthaiyae Engal Punitharae song lyrics – சூசை தந்தையே எங்கள் புனிதரே
சூசை தந்தையே எங்கள் புனிதரே
தொழிலாளர்களின் பாதுகாவலரே
தரணியர் யாம் செபிக்கின்றோம் பரிந்து பேசிடுவாய்
- நேர்மையுடன் வாழ்ந்தீர் நீதிமான் என்றோம்
அமைதியுடன் வாழ்ந்தீர் அன்பு புனிதர் என்றோம்
இறைவனின் திருவுளம் செயல்பட துணிந்தீர்
ஆவியின் அருள்துணையில் உறுதுணைக் கொண்டீர்
மரியின் கணவராய் இயேசுவின் தந்தையாய்
புனித வாழ்வின் சிகரமானார் - உழைப்பில் உயர்வுக் கண்டீர்
உழைக்க கற்று தந்தீர்
உழைப்பவரின் குடும்பங்களை
அரவணைக்க வேண்டுகிறோம்
எளிமை காட்சிதனை கேடயமாய் கொண்டீர்
வாழ்வில் அர்ப்பணத்தை அவனியில் சொன்னீர்
உழைத்து வாழும் உயர்ந்த பண்பில்
மக்கள் மனதில் நிலைத்து நின்று
புனித வாழ்வின் சிகரமானார்
St. Joseph’s Song sung by Fr. Victor சூசையப்பர் பாடல்