எழுந்து பெத்தேலுக்கு – Yelunthu Bethel

எழுந்து பெத்தேலுக்கு போ
அதுதானே தகப்பன் வீடு
நன்மைகள் பல செய்த
நல்லவர் இயேசுவுக்கு
நன்றி பாடல் பாடனும்
துதி பலிபீடம் கட்டணும்

1.ஆபத்துநாளிலே பதில் தந்தாரே
அதற்கு நன்றி சொல்வோம்
நடந்த பாதையெல்லாம் கூட வந்தாரே
அதற்கு நன்றி சொல்வோம்

அப்பா தகப்பனே நன்றி நன்றி – 2
எழுந்து பெத்தேல் செல்லுவோம்

2.போகுமிடமெல்லாம் கூடயிருந்து
காத்து கொள்வேனென்றீர்
சொன்னதை செய்து முடிக்கும் வரைக்கும்
கைவிடமாட்டேனென்றீர்

3.பிறந்தநாள் முதல் இந்நாள் வரைக்கும்
ஆதரித்த ஆயரே
ஆபிரகாம் ஈசாக்கு வழிபட்டு
வணங்கிய எங்கள் தெய்வமே

4.எல்லா தீமைக்கும் நீங்கலாக்கி
என்னை மீட்டீரையா
வாழ்நாள் முழுவதும் மேய்ப்பனாயிருந்து
நடத்தி வந்தீரையா

5.படுத்திருக்கும் இந்த பூமி சொந்தமாகும்
என்று வாக்குரைத்தீரையா
பலுகி பெருகி தேசமாய் மாறுவோம்
என்று வாக்குரைத்தீரையா

6.அந்நிய தெய்வங்கள் அருவருப்புகள்
அகற்றி புதைத்திடுவோம்
ஆடை மாற்றுவோம் தூய்மையாக்குவோம்
பாடி கொண்டாடுவோம்

7.வெறுங்கையோடு பயந்து ஓடிய யாக்கோபை
தெரிந்து கொண்டீர்
இஸ்ரவேல் இனமாய் ஆசீர்வதித்து
பலுகிப்பெருகச் செய்தீர்

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version