Yesu Maha rasanukae – ஏசு மகாராசனுக்கே
பல்லவி ஏசு மகாராசனுக்கே இன்றும் என்றும் ஜே அனுபல்லவி மீசுரர்கள் போற்றும் எங்கள் ஈசனுக்கு ஜே ஜே சரணங்கள் 1.சின்ன மறி யொன்றைச் சீடர் கொண்டு சேர்த்தனர் கன்னி மரி மகனைப் பாலர் காண ஏகினார். 2.மாவிலையும் மரக்கிளையும் தரித்துவந்துமே பாவியின் நேசருக்கவர் தாவி விரித்தார். 3.காணரிய கூட்ட ஜனம் கண்டு களித்துச் சேணமாக வஸ்திரம் விரித்துச் சேவித்தார். 4.சோலைக்கிளி குயலினங்கள் சூழ்ந்து பாடியே மாலையிட்டால்போல் அவரை மகிழ்ந்து போற்றவே. 5.ஈந்து செடி குருத்துகளை எடுத்துக் கைகளில் […]