Pajithidum Suvisheda Thirusabaiyaarae – பஜித்திடும் சுவிசேட திருச்சபையாரே

பல்லவி பஜித்திடும் சுவிசேட திருச்சபையாரே, பரனை நினைத்துத் தினம் மகிழ்வீரே. சரணங்கள் 1. பஜித்திடும் சுவிசேஷசபைக்குள் வந்தோரே, பரனருளால் ஜெயமடைந்தீரே, துஜம்[1] பிடித்தே ஜெயமெனப் புகல்வீரே, தோத்ரசங்கீர்த்தனம் துத்யம் செய்வீரே. – பஜி 2. நித்ய சுவிசேடமே நேர்வழியாமே, நிமலனருள் வழிபோவேமே. சத்ய மறைபிடிக்கில் வழிதவறோமே, தத்வ குணாகரன் தனைத்துதிப்போமே. – பஜி 3. திருக்குருசில் மரித்தோரது நேசம், தினம் மறவாதே, வைவிசுவாசம். இரக்க புண்ணியங்களால் எழில் நகர்வாசம், இனிபெறலாமென வெண்ணுதல் மோசம். – பஜி

Pajithidum Suvisheda Thirusabaiyaarae – பஜித்திடும் சுவிசேட திருச்சபையாரே Read More »

Pandikai Kondaduvom – பண்டிகை கொண்டாடுவோம்

பல்லவி பண்டிகை கொண்டாடுவோம்,-ஆம், நாம் பண்டிகை கொண்டாடுவோம் . சரணங்கள் 1. பண்டிகை கொண்டாடிப்,-பரமனைமன்றாடிப் பஸ்கா கிறிஸ்தை நமஸ்காரஞ் செய்தாடி. – பண்டிகை 2. புன்மைகொடும் பொல்லாப்பு-புளிமா வைவிலக்கி உண்மை பரி சுத்தமாம்-உயர்மா வைப்பலுக்கி – பண்டிகை 3. இன்றுயிர்த்தெ ழுந்தகோன்-இனிமரிப்ப தில்லையே பொன்று மர ணஞ்சிறை-பூண்டாள்வ தில்லையே. – பண்டிகை 4. தரைபவத்திற் கென்றொரு-தரமரித்த னர்சுதன் பரனவர்க்கு மகிமையாய்ப்-படிபிழைத் திருக்கிறார். – பண்டிகை 5. நாதன்போற் பாவத்திற்கு-நாமுமரிப் போமாகாப் பேதமின்று யேசுவுக்குப்-பிழைத்திருப் போமாக. – பண்டிகை

Pandikai Kondaduvom – பண்டிகை கொண்டாடுவோம் Read More »

Parama Vaithiya Arumai – பரம வைத்தியா அருமை

பல்லவி பரம வைத்தியா! அருமை ரட்சகனே! பிணிதீர்க்கும் வைத்தியப் பிணியினை ஆசிர்வதியும் ஐயனே! சரணங்கள் 1. பிணியாளிக்கு நம்பிக்கை தாருமே-மருந்தோடே உமது பேரதிசய கிருபை கூருமே. – பரம 2. உள்ளக் கனிவோடுழைக்கும் வைத்தியர்க்கும்-அவருடன் துணை நின்று உதவும் தொண்டர்கள் யாவர்க்கும் இரங்கும். – பரம 3. சயமும் சுரமும் பயமுறுத்துமே,-இதைத் தடுத்திடக் கொடை தரும் பெரியோரைப் பெருகச் செய்யுமே. – பரம 4. அரிய நூதன முறைகள் காணவே-ஆராய்ச்சிகள் செய்யும் அறிஞரால் புதுவழிகள் தோன்றவே. –

Parama Vaithiya Arumai – பரம வைத்தியா அருமை Read More »

BAYAPADATHEY NEE VETKAPATTU – பயப்படாதே நீ வெட்கப்பட்டு

பயப்படாதே நீ வெட்கப்பட்டு போவதில்லைஉன்னை பெயர் சொல்லி அழைத்தேன் நீ என்றும் என்னுடையவன் – 2உன்னை பெலப்படுத்தி உனக்கு சகாயம் செய்வேன்என் நீதியின் கரத்தினால் தங்கிடுவேன் – 2 வலது புறமும் இடது புறமும்இடம் கொண்டு பெருகிடுவாய்பாழாய் கிடந்த பட்டணங்களைசுதந்தரித்து குடியேருவாய் – 2 1. என் தாசனாகிய யாக்கோபே யேஷுரனே பயப்படாதே – 2நீரோடை அருகிலுள்ளஅலரி செடி போல வளர்ந்திடுவாய் – 2 2. நீதியினாலே ஸ்திரப்படுவாய்கொடுமைகட்கு தூரமாவாய் – 2பயமில்லாதிருப்பாய்திகிலுக்கு தூரமாவாய் – 2

BAYAPADATHEY NEE VETKAPATTU – பயப்படாதே நீ வெட்கப்பட்டு Read More »

Parisuthaavi Neer Vaarum – பரிசுத்தாவி நீர் வாரும்

பரிசுத்தாவி நீர் வாரும் – Parisuthaavi Neer Vaarum பல்லவி பரிசுத்தாவி நீர் வாரும்!-திடப்படுத்தல் பெறுவோர்க் கருள் தாரும்!-இன்று அனுபல்லவி அருளினைப் பெருக்கும் அக்கினி மயமேஆவியின் நற்கனி நல்குமா தூயமே. – பரி சரணங்கள் 1. செயல்குண வசனத் தீதுகள் போக,திருச்சபை யதிலிவர் பூரணராக,ஜெயமொடு பேயை எதிர்த்துக் கொண்டேக,ஜெபதப தியானஞ் செய்வதற்காக. – பரி 2. நற்கருணைதனை நலமுடன் வாங்க,நாளொரு மேனியாய் ஆவியி லோங்க,சற்குணராய் இவர் சபையைக் கை தாங்க,சகல தீதான பேதங்களும் நீங்க. – பரி

Parisuthaavi Neer Vaarum – பரிசுத்தாவி நீர் வாரும் Read More »

Parathilae Nanmai – பரத்திலே நன்மை

பல்லவி பரத்திலே நன்மை வருகுமே,-நமக்கு நித்திய பாக்கியம் மிகப் பெருகுமே. அனுபல்லவி பரத்திலே சிறந்த ஜீவ பதி வளர் கிரீடம் அதைச் சிரத்திலே அணிய, யேசு தேவனைப் பணிந்து போற்றுவோம். – பரத் சரணங்கள் 1. வருத்தம், பசி, தாகம், சாவில்லை;-அலறுதலும் மனத்துயர், இரவு சாபம் இல்லை; அருணன், மதி வேண்டியதில்லை;-துன்மார்க்கர் எனும் அசுத்தர் வந்து சேர்வதும் இல்லை; சருவ மகிமை யுடைய தந்தை பரனொடு கிறிஸ்தின் திரு அருள் மிகச் சிறந்த ஒளி தெளிவுற ப்ரகாசம்

Parathilae Nanmai – பரத்திலே நன்மை Read More »

Bakthiyaai Jebam Pannavae – பக்தியாய் ஜெபம் பண்ணவே

நல்சித்தம் ஈந்திடும் இயேசுவே 1. பக்தியாய் ஜெபம் பண்ணவே சுத்தமாய்த் தெரியாதய்யா! புத்தியோடுமைப் போற்ற, நல் சித்தம் ஈந்திடும், யேசுவே! 2. பாவ பாதையைவிட்டு நான் ஜீவ பாதையில் சேர, நல் ஆவி தந்தெனை ஆட்கொளும், தேவ தேவ குமாரனே! 3. பொய்யும் வஞ்சமும் போக்கியே மெய்யும் அன்பும் விடாமல், யான் தெய்வமே, உனைச் சேவித்திங் குய்யும் நல்வரம் உதவுவாய். 4. அப்பனே! உனதன்பினுக் கெப்படிப் பதில் ஈட்டுவேன்? செப்பும் என்னிதயத்தையே ஒப்படைத்தனன் உன்னதே. 5. சிறுவன்

Bakthiyaai Jebam Pannavae – பக்தியாய் ஜெபம் பண்ணவே Read More »

Paranae Thirukadaikan Paaraayo – பரனே திருக்கடைக்கண் பாராயோ

பரனே, திருக்கடைக்கண் பாராயோ? பல்லவி பரனே, திருக்கடைக்கண் பாராயோ?-என்றன் பாவத்துயர் அனைத்தும் தீராயோ? சரணங்கள் 1. திறம் இலாத எனை முனியாமல்,-யான் செய்த குற்றம் ஒன்றும் நினையாமல். – பரனே 2. மாய வலையில் பட்டுச் சிக்காமல்,-லோக வாழ்வில் மயங்கி மனம் புக்காமல். – பரனே 3. அடியேனுக் கருள் செய் இப்போது,-உன தடிமைக் குன்னை அன்றிக் கதி ஏது? – பரனே 4. வஞ்சகக் கவலை கெடுத் தோட்டாயோ?-என்றன் மனது களிக்க வர மாட்டாயோ? –

Paranae Thirukadaikan Paaraayo – பரனே திருக்கடைக்கண் பாராயோ Read More »

Paranae Paraporulae Nithya – பரனே பரப்பொருளே நித்ய

பரனே பரப்பொருளே நித்ய – Paranae Paraporulae Nithya 1.பரனே பரப்பொருளே நித்ய பாக்கியனே சத்திய வாக்கியனே,நரரான பாவிகட்காய் இந்த நானிலத்தில் வந்த வானவனே! – பரனே 2.காவில் அதம் ஏவை தேவ கற்பனை மீறீனதால் உலகில்மேவிய பாவம் அற பொல்லா வெஞ்சினக் கூளியின் வஞ்சமற‌ – பரனே 3.வேறோர் மலர்க்காவில் சென்று வேதனைப் போற்றி மனம் நொறுங்கிஆறாக் கொடுந் துயரம் உந்த்ன் ஆத்துமத்தில் வரலானதுவோ? – பரனே 4.ஈராறு சீடர்களில் பண இச்சை மிகுந்த ஒரு

Paranae Paraporulae Nithya – பரனே பரப்பொருளே நித்ய Read More »

Paninthu Nadanthu Kondarae – பணிந்து நடந்து கொண்டாரே

பணிந்து நடந்து கொண்டாரே – Paninthu Nadanthu Kondarae பணிந்து நடந்து கொண்டாரே பரன் பாலனும்கனிந்து தாய் தந்தையருக்குஅணிந்து தேவ தயவைப் பணிந்த மனதினோடுஅவர்க்கு தணிந்து எதிர்முனைந்து சொல்லாதபடி – பணி 1.தந்தை தாய் தனை மதித்து அவருடைய‌தயவின் சித்தத்துக் கமைந்த‌மைந்தர்கள் உலகினில் வாழ்ந்து இருப்பாரென்றுசிந்தை மகிழ்ந்து பரன் செப்பிய மொழிப்படி – பணி 2.தந்தைக் குகந்த வேளையில் அவருடனேவிந்தை யுடனே பயின்றார்;நிந்தை யிதுவென்றெண்ணிச் சிந்தைக் கலங்கிடாமல்எந்த விதமும் நரர் தன்னைப் பின்பற்றியேகப் – பணி 3.பாவம்

Paninthu Nadanthu Kondarae – பணிந்து நடந்து கொண்டாரே Read More »

Pacha Samba – பச்ச சம்பா நெல்லெடுத்து

பச்ச சம்பா நெல் எடுத்து – Pacha Samba Nel eduthu பச்ச சம்பா நெல் எடுத்து குத்தி போடம்மாஅட தேங்காய உடச்சி திருவி வையம்மாபச்ச கிளி போல ஒரு பொண்ணு வராம்மாபுது பொண்ணு பாத்தா அசந்துபோவ ரொம்ப ஜோரம்மா கல்யாணம் கல்யாணம் இது நம்ம வீட்டு கல்யாணம்ஆட்டுக் குட்டியானவரின் மேன்மையான கல்யாணம் கெட்டி மேளம் சத்தம் அது இடி முழங்குதுஆரவார சத்தத்துல வானம் அசையுதுசந்தோசமாய் கொண்டாட்டமாய் துதி செலுத்திடுஉற்சாகமாய் ஆனந்தமாய் ஆடிபாடிடுமணவாளன் வேகமாய் வருகிறார் மணவாட்டி

Pacha Samba – பச்ச சம்பா நெல்லெடுத்து Read More »

Bakthare Vaarum – பக்தரே வாரும்

பக்தரே வாரும் ஆசை – Bakthare Vaarum Aasai 1. பக்தரே வாரும் ஆசை ஆவலோடும்நீர் பாரும் நீர் பாரும் இப்பாலனைவானோரின் ராஜன் கிறிஸ்து பிறந்தாரே சாஷ்டாங்கம் செய்ய வாரும்சாஷ்டாங்கம் செய்ய வாரும்சாஷ்டாங்கம் செய்ய வாரும் இயேசுவை 2. தேவாதி தேவா ஜோதியில் ஜோதிமானிட தன்மை நீர் வெறுத்திலீர்தெய்வ குமாரன் ஒப்பில்லாத மைந்தன் 3. மேலோகத்தாரே மா கெம்பீரத்தோடுஜென்ம நற்செய்தி பாடிப் போற்றுமேன்விண்ணில் கர்த்தா நீர் மா மகிமை ஏற்பீர; 4. இயேசுவே வாழ்க இன்று ஜென்மித்தீரேபுகழும்

Bakthare Vaarum – பக்தரே வாரும் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks