1 சிலுவைக் கொடி முன்செல்ல
செல்வார் நம் வேந்தர் போர் செய்ய;
நம் ஜீவன் ஆனோர் மாண்டனர்;
தம் சாவால் ஜீவன் தந்தனர்.
2 மெய்ச் சத்தியம் நாட்டப் பாடுற்றார்,
நல் வாலிபத்தில் மரித்தார்;
நம் மீட்பர் ரத்தம் பீறிற்றே,
நம் நெஞ்சம் தூய்மை ஆயிற்றே.
3 முன்னுரை நிறைவேறிற்றே;
மன்னர்தம் கொடி ஏற்றுமே;
பலக்கும் அன்பின் வல்லமை
சிலுவை வேந்தர் ஆளுகை.
4 வென்றிடும் அன்பின் மரமே!
வெல் வேந்தர் செங்கோல் சின்னமே!
உன் நிந்தை மாட்சி ஆயிற்றே,
மன்னர் உம்மீது ஆண்டாரே.
5 உன்னில் ஓர் நாளில் ஆண்டவர்
மன்னுயிர் சாபம் போக்கினர்;
ஒப்பற்ற செல்வம் தம்மையே
ஒப்பித்து மீட்டார் எம்மையே.
- சின்னஞ்சிறு தீபம் – Chinnajsiru Deepam
- இவ்வுயர் மலைமீதினில் – Evvuyar Malai Meethinil
- நித்தம் நித்தம் பரிசுத்தர் – Niththam Niththam Parisuththar
- கர்த்தர் தம் ஆசி காவல் – The Lord bless Thee
- மங்களம் ஜெயமங்களம் – Mangalam Jeyamangalam
Siluvai kodi mun sella – சிலுவைக் கொடி