ராச ராச பிதா மைந்த – Raasa Raasa Pithaa Maintha

ராச ராச பிதா மைந்த – Raasa Raasa Pithaa Maintha

பல்லவி

ராச ராச பிதா மைந்த தேசுலாவுசதா நந்த
யேசு நாயகனார் சொந்த மேசியா நந்தனே!

அனுபல்லவி

ஜெகதீசு ரேசுரன் சுக நேச மீசுரன் மக – ராச

சரணங்கள்

1.மாசிலா மணியே! மந்த்ர ஆசிலா அணியே! சுந்த்ர
நேசமே பணியே, தந்திர மோசமே தணியே;
நிறைவான காந்தனே! இறையான சாந்தனே! மறை – ராச

2.ஆதியந்த மில்லான் அந்த மாதினுந்தியிலே, முந்த
வேத பந்தனமாய் வந்த பாதம் வந்தனமே;
பத ஆமனாமனா! சுதனாமனாமனா! சித – ராச

3.மேன்மையா சனனே, நன்மை மேவுபோசனனே, தொன்மை
பான்மை வாசனனே, புன்மை பாவ மோசனனே,
கிருபா கரா நரா! சருவேசுரா, பரா ஸிரீ – ராச

4.வீடுதேடவுமே, தந்தை நாடுகூடவுமே, மைந்தர்
கேடு மூடவுமே, விந்தையோடு பாடவுமே,
நரவேட மேவினான்; சுரராடு கோவினான்; பர – ராச


Raasa Raasa Pithaa Maintha Deasa Laavusathaa Nantha
Yeasu Naayakanaar Sontha Maesiyaa Nanthanae

Jegatheesu Raesuran Suga Naesa Meesuran Maka

1.Maasilaa Manniyae! Manthra Aasilaa Aniyae, Sunthara
Naesamae Paniyae, Thanthira Mosamae Thaniyae
Niraivaana kaanthanae, Iraiyaana Saanthanae Marai

2.Aathiyantha Millaan Antha MaathiNunthiyilae, Muntha
Vedha Panthanamaai vantha Paatham Vanthanamae,
Patha Aamanaamanaa suthanaamanaamanaa Sitha

3.Meanmaiyaa Sananae Nanmai Meavu Posananae Thonamai
Paanmai Vaasananae Punmai Paava Mosananae
Kirubaa Karaa Naraa Saruveasuraa Paraa Shiri

4.veedu Theadavumae, Thanthai Naadu koodavumae, Mainthar
keadu Moodavumae, Vinthaiyodu Paadavumae
Naraveada Meavinaan, Suraraadu kovinaan, Para

எதிரியானவன் உங்களைக்குறித்துப் பொல்லாங்கு சொல்லுகிறதற்கு ஒன்றுமில்லாமல் வெட்கப்படத்தக்கதாக, உபதேசத்திலே விகற்பமில்லாதவனும், நல்லொழுக்கமுள்ளவனும் குற்றம்பிடிக்கப்படாத ஆரோக்கியமான வசனத்தைப் பேசுகிறவனுமாயிருப்பாயாக.

Sound speech, that cannot be condemned; that he that is of the contrary part may be ashamed, having no evil thing to say of you.

தீத்து : Titus:2:8

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version