Paaduven Ummai Paaduven – பாடுவேன் உம்மை பாடுவேன்song lyrics

பல்லவி

பாடுவேன் உம்மை பாடுவேன்
என் தேவனை பாடி போற்றுவேன் எந்நாளும்
கண்மணி போல் என்னை காத்த தேவனை – 2

சரணம்

விலகாதவர் வினை தீர்த்தவர்
விடிவெள்ளியாய் என் வாழ்வில் வந்த என் தேவன்
பரமன் அவர் பாவி என்னை
பரம் சேர்க்க தன் உயிரை தந்த என் தேவன்
இயேசுவை பாடத்தானே – சேர்ந்து
அவரோடு வாழத்தானே – 2
அவர் ரூபமாய் எனை வனைந்தெடுத்தார் – அதிசயமாய்

சரணம்

இம்மானுவேல் கூடேயிருப்பவர்
இருள் நீக்கி பயம் போக செய்தார் என் இயேசு
மாறாதவர் வழிகாட்டவே
விண்னைதுறந்து மண்ணுலகம் வந்தார் என் இயேசு
வாழ்த்துவேன் தினமும் உம்மை – மகிழ்ந்து
போற்றுவேன் வாழ்நாளெல்லாம் – 2
உம் நாமம் பெருகட்டும் என் நாமம் சிறுகட்டும் பாரில் – இப்பாரில்

சரணம்

நல் மேய்ப்பராம் என் இயேசுதான்
கரம்பிடித்து என்னை சீயோனில் சேர்த்திடுவார்
இரண்டாம் முறை வருவார் பாரில்
வரும்வரையில் வழுவாமல் காப்பார் என் நேசர்
துதிகானம் பாடத்தானே – என்னை
இதுவரை பாதுகாத்தீர் – 2
உலகெங்கும் உம் வசனம் பாடலாய் பாட வழி நடத்தும் – என்னை நடத்தும்

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version