Manitha Nee Manthaane – மனிதா நீ மண் தானே SONG LYRICS

பல்லவி
மனிதா நீ மண் தானே
திரும்புவாய் நீ மண்ணுக்குதானே – 2
உன் பாவங்களெல்லாம் அறிக்கைசெய்து
இயேசுவின் மார்பினில் சாய்ந்திட வா
உன் பாவங்களெல்லாம் உதறிவிட்டு
நேசரின் அன்பில் இளைப்பார வா

சரணம் -1
நற்கனி கொடாத மரங்களெல்லாம்
வெட்டுண்டு அக்கினியில் போடப்படும் – 2
பரமபிதாவின் சித்தம்போல
வாழ்பவன் பரலோகில் சேர்ந்திடுவான் – 2

சரணம் – 2
களத்தை விளக்கி நம் ஆண்டவர்
கோதுமையை களஞ்சியத்தில் சேர்ப்பார் – 2
அவியாத அக்கினியால்
பதரையோ சுட்டெரிப்பார் – 2
Scale_D minor (3/4) & BPM 135

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version