கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் – Kondaduvom Naam Kondaduvom

கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்
பண்டிகைகள் நாம் கொண்டாடுவோம்
எக்காளம் ஊதி ஏழு நாட்களும்
யெகோவா தேவனைக் கொண்டாடுவோம்

1. பலிகள் செலுத்தி பரிசுத்தர் சமூகத்தில்
பாடிக் கொண்டாடுவோம்
தீயவன் நடுவில் வருவதில்லை
கர்த்தர் ஜெயம் எடுத்தார்-நம்

அகமகிழ்வோம் அக்களிப்போம்
ஆனந்த சத்தமிடுவோம்

2. நல்லவர் கர்த்தர் கிருபையுள்ளவர்
என்று நாம் உயர்த்திடுவோம்
கர்த்தரின் மகிமை மேகம் போல
இறங்கட்டும் இந்நாளிலே

3. அசைக்க முடியா கூடாரமாவோம்
அமைதியின் இல்லமாவோம்
நோயாளி என்று சொல்வதில்லை
குற்றங்கள் நீங்கியதே

4. இஸ்ரவேல் ஜனத்துக்கு தேவன் தந்த
பிரமாணம் இதுதானே
எகிப்து தேசம் விட்டு புறப்படும்போது
கட்டளையாய் கொடுத்தார்

5. பழைய புளித்த மாவை அகற்றி
தூக்கி எறிந்திடுவோம்
அசுத்தம் அகற்றிடுவோம்
துர்க்குணம் பொல்லாப்பு தவிர்த்திடுவோம்

6.எல்லாம் முடிந்தது என்று இரட்சகர்
முழங்கினார் சிலுவையிலே
சாவுக்கு அதிபதி சாத்தானை
வாலே வென்றுவிட்டார்

Kondaduvom - Jebathotta Jeyageethangal Vol 33

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version