இந்தக் குழந்தையை நீர் – Intha Kulanthaiyai Neer
பல்லவி
இந்தக் குழந்தையை நீர் ஏற்றுக்கொள்ளும், கர்த்தாவே.
அனுபல்லவி
உந்தம் ஞானஸ்நானத்தால் உமக்குப் பிள்ளையாய் வந்த-இந்த
சரணங்கள்
1. பிள்ளைகள் எனக் கதிகப் பிரியம், வரலாம், என்று
உள்ளமுருகிச் சொன்ன உத்தம சத்தியனே. – இந்த
2. பாலரைக் கையில் ஏந்தி பண்பாய் ஆசீர்வதித்த
சீலமாயின்றும் வந்தாசீர்வாதம் செய்யும், ஐயா. – இந்த
3. உமக் கூழியஞ் செய்யவும் உம்மைச் சிநேகிக்கவும்,
உமது ஆவியைத் தந்து உம்முட மந்தை சேர்த்து. – இந்த
4. உலகமும் பேய்ப் பசாசும் ஒன்றும் தீது செய்யாமல்,
நலமாய் இதைக் காத்தாளும், நன்மைப் பராபரனே! – இந்த
5. விசுவாசத் தோடிதுந்தன் மேய்ப்புக்கும் உள்ளடங்கிப்,
பசிய மரம்போல் தெய்வ பத்தியிலே வளர. – இந்த
Intha Kulanthaiyai Neer Yeatturkollum Karththaavae
Untham Gnanasnaanaththaal Umakku Pillaiyaai Vantha -Intha
1.Pillaigal Enak Kathiga Piriyam Varalaam Entru
Ullamurugi Sonna Uththama Saththiyanae
2.Paalarai Kaiyil Yeanthi Panpaai Aaseervathitha
Seelamaayinintrum Vanthaaseervaatham Seiyum Aiyaa
3.Umakku Oozhiyam Seiyavum Ummai Sineakikkavum
Umathu Aaviyai Thanthu Ummuda Manthai Searththu
4.Ulagamum Peai Pasaasum Ontrum Theethu Seiyaamal
Nalamaai Ithai Kaaththarulum Nanmai Paraaparanae
5.Visuvaasa Thodithunthan Meaippukkum Ulladangi
Pasiya Maram Poal Deiva Panthiyil Valara
பல்லவி
இந்தக் குழந்தையை நீர் ஏற்றுக்கொள்ளும் கர்த்தாவே!
அனுபல்லவி
உந்தனுக் கிந்தருணம் சொந்தமாய் ஒப்புவிக்கும்
சரணங்கள்
1. சேனை வீரனாய் வந்து ஈன சாத்தானை வென்று
ஞான புதல்வனாய் எந்நாளும் உமைத் துதிக்க – இந்த
2. பொய், வஞ்சம், வன்மம், பகை பொல்லாக் குண மணுகா
மெய்யன்பு சத்யம் நேசம் விளங்கி என்றுமொழுக – இந்த
3. இரட்சிப்பின் சத்தியத்தை எத்திசையிலுங் கூறும்
சுத்த நல் வீரனாக இத்தரையில் விளங்க – இந்த
4. சஞ்சலம், துயர், துக்கம் மிஞ்சும் தருணத்திலும்
நெஞ்சிலும் நின் பஞ்ச காயம் தஞ்ச மென்றுன்னைச் சார – இந்த
Intha Kulanthaiyai Neer Yeatturkollum Karththaavae
Unthanukku Kintharunam Sonthamaai Oppuvikkum
1.Seanai Veeranaai Vanthu Eena Saaththaanai Ventru
Gnana Puthalvanaai Ennaalum Umai Thuthikka
2.Poi Vanjam Vanmam Pagai Pollaa Guna Manugaa
Meiyanbu Sathyam Neasam Vilangi EntruMoluga
3.Ratchippin Saththiyaththai Eththisaiyilum Koorum
Suththa Nal Veeranaaga Iththaraiyil Vilanga
4.Sanjalam Thuyar Thukkam Minjum Tharunaththilum
Nenjilum Nin Panja Kaayam Thanja Mentrunnai Saara