Anbae pirathanam – அன்பே பிரதானம்

அன்பே பிரதானம் – Anbae Pirathaanam

பல்லவி

அன்பே பிரதானம் – சகோதர
அன்பே பிரதானம்

சரணங்கள்

1. பண்புறு ஞானம் – பரம நம்பிக்கை
இன்ப விஸ்வாசம் – இவைகளிலெல்லாம் – அன்பே

2. பலபல பாஷை – படித்தறிந்தாலும்
கலகல வென்னும் – கைம்மணியாமே – அன்பே

3. என் பொருள் யாவும் – ஈந்தளித்தாலும்
அன்பிலையானால் – அதிற்பயனில்லை – அன்பே

4. துணிவுடனுடலைச் – சுடக்கொடுத்தாலும்
பணிய வன்பிலாற் – பயனதிலில்லை – அன்பே

5. சாந்தமும் தயவும் – சகல நற்குணமும்
போந்த சத்தியமும் – பொறுமையுமுள்ள – அன்பே

6. புகழிறுமாப்பு – பொழிவு பொறாமை
பகையநியாயப் – பாவமுஞ் செய்யா – அன்பே

7. சினமடையாது – தீங்கு முன்னாது
தினமழியாது தீமை தராது – அன்பே

8. சகலமுந் தாங்கும் – சகலமும் நம்பும்
மிகைப்பட வென்றும் – மேன்மை பெற்றோங்கும் – அன்பே


Anbae Pirathaanam – Sagothara
Anbae Pirathaanam

1.Panpuru Gnanam Parama Nambikkai
Inba Viswaasam Ivaikalilellaam

2.Pala Pala Paasai Padiththarinthaalum
Kalakala Vennum Kaimmaniyaamae

3.En Porul Yaavum Eenthaliththaalum
Anbillaiyaanaal Athirpayanillai

4.Thuniyudanudalai Suda Koduththaalum
Paniya vanpilaar Payanathillillai

5.Saanthamum Thayavum Sagala Nargunamum
Poontha Saththiyamum Porumaiyumulla

6.Pugalirumappu Polivu Poraamai
Pagainiyaaya Paavamum Seiyaa

7.Sinamadaiyaathu Theengu Munnaathu
Thinamaliyaathu Theemai Tharaathu

8.Sagalamum Thaangum Sagalamum Nambum
Migaipada Ventrum Meanmai Pettrongum

பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.

And God blessed them, and God said unto them, Be fruitful, and multiply, and replenish the earth, and subdue it: and have dominion over the fish of the sea, and over the fowl of the air, and over every living thing that moveth upon the earth.

ஆதியாகமம் | Genesis: 1: 28

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version