ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே – Aathuma Katharai Thuthikintrathae
பல்லவி
ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே,-என்றன்
ஆவியும் அவரில் களிக்கின்றதே,-இதோ!
அனுபல்லவி
நேர்த்தியாய்ப் பாடுவேன், நிதங்கனிந்தே எந்தன்
பார்த்திப னுட பதந் தினம்பணிந்தே.-இதோ! – ஆத்துமா
சரணங்கள்
1. அடிமையின் தாழ்மையைப் பார்த்தாரே,-என்னை
அனைவரும் பாக்கிய மென்பாரே,
முடிவில்லா மகிமை செய்தாரே,-பல
முடையவர் பரிசுத்தர் என்பாரே.-இதோ! – ஆத்துமா
2. பயப்படும் பத்தருக் கிரங்குகிறார்,-நரர்
பார்த்திடப் பெருஞ்செயல் புரிகின்றார்;
உயர்த்திடு நரர்களைச் சிதறடிப்பார்,-தன்னை
உகந்தவர் தாழ்ந்திடில் உயர்த்துகின்றார்.-இதோ! – ஆத்துமா
3. முற்பிதாக் களுக்கவர் சொன்னதுபோல்-அந்த
முனியாபி ராமுட ஜனமதன்பால்,
நட்புடன் நினைவொடு நல்லிஸ்ரேல்-அவன்
நலம்பெற ஆதரித் தார்மறவேல்.-இதோ! – ஆத்துமா
Aathuma Katharai Thuthikintrathae Entran
Aaviyum Avaril Kalikkintrathae – Itho
Nearththiyaai Paaduvean Nithanganinthae Enthan
Paarththipanuda Patham Thinam Paninthae Itho
1.Adimaiyin Thaazhmaiyaai Paarththaarae – Ennai
Anaivarum Bakkiya Menbaarae
Mudivilla Magimai Seitharae Pala
Mudaiyavar Parisuththar Enbaarae – Itho
2.Bayappadum Baktharum Kirangukiraar – Narar
Paarththida Pearunjseyal Purikintraar
Uyarththidu Nararkalai Siraradippaar Thannai
Uganthavar Thaazhnthidil Uyarththukintraar – Itho
3.Murpithaa Kalukkavar Sonnathu Poal Antha
Muniyaapi Raamuda Janamathanpaal
Natpudan Ninaivodu Nallisarael Avan
Nalam Peara Aathari Thaarmaraveal – Itho