Aathi Paraaparanin Suthanae – ஆதி பராபரனின் சுதனே

சரணங்கள்

1. ஆதி பராபரனின் சுதனே, கிறிஸ்தேசுநாதா – இந்த
அறிவில்லா யூதர்க்காய் ஐயனை வேண்டினீர் – யேசுநாதா

2. பாடு படுத்து வோர்க்கோ நீர் மன்னிப்பீந்தீர் – யேசு நாதா
இந்தப் பாவியாம் என் பாவப் பாரம் பெரிதல்லோ – யேசு நாதா

3. யூதரிலும் பொல்லாப் பாதகரானோமே – யேசுநாதா
மன யூகமுற்று முழுத் துரோகம் செய்தோமல்லோ – யேசு நாதா

4. அறிந்து மதிகமாய்ப் பாவங்கள் செய்தோமே – யேசுநாதா
அவை அத்தனையும் பொறுத்தருளும் கிருபையால் – யேசுநாதா

5. அன்புமிகும் வல்ல ஆண்டவரே கிறிஸ்து – யேசுநாதா
இனி ஆகாதோனாய்க் காணேன் ஆணைகள் செய்கின்றேன் – யேசுநாதா

6. மற்றவர் குற்றத்தை யாமும் மன்னித்திட – யேசுநாதா
நல்ல வாஞ்சையளித்து வரங்கள் புரிந்தருள் – யேசுநாதா

7. பரதேசிகளெம்மை அரவணையும் கிறிஸ்து – யேசுநாதா
திருப்பாதம் பணிந்து மன்றாடுகிறோம் கிறிஸ்து – யேசு நாதா

எனக்காகவே பாடுகள் பட்டீரோ?

1. ஆதி பராபரனின் சுதனே கிறிஸ்தேசுநாதா- எனக்
காகவே இத்தனை பாடுகள் பட்டீரோ யேசு நாதா?
தீதணுகாத பராபரன் சேய் அல்லோ யேசுநாதா? – நீர்
செய்த குற்றம் அணுவாகிலும் தான் உண்டோ யேசுநாதா?
பாதகன் நான் அல்லோ கட்டுண்ண வேண்டிய தேசுநாதா? சற்றும்
பாவம் இல்லாத நீர் கட்டுண்ணப் பட்டதேன் யேசுநாதா?
வாதை எனக்கு வரத்தகும் அல்லவோ யேசுநாதா? சற்றும்
மாசணுகாத நீர் வாதைக்குள் ஆனீரோ யேசுநாதா?

2. மத்யஸ்தனாய் எனக்காக் வந்தீர் அல்லோ யேசுநாதா? இந்த
வஞ்சகன் சொந்தப் பிணையாளி நீர் அல்லோ யேசுநாதா?
எத்தனை பாதகம் செய்தவனாகிலும் யேசுநாதா? – எனை
ரட்சிப்பதுன் கடன் அல்லாமல் ஆர் கடன் யேசுநாதா?
சத்துரு நான் என் றறிந்தும் இருந்தீரே யேசுநாதா? – கெட்ட
சண்டாளன் சிந்தையை முற்றும் அறிவீரே யேசுநாதா?
சித்தம் இரங்கி எனை முகம் பார்க்கவே யேசுநாதா? – என்னைத்
தேடி வலிய வரத் தயவானீரோ யேசுநாதா?

3. பத்தம் இல்லாதது ரோகி நான் அல்லவோ யேசுநாதா? – உமைப்
பாடுபடுத்தின பாதகன் நான் அல்லோ யேசுநாதா?
பெத்தரிக்கமான பெருமையினாலே நான் யேசுநாதா! – கெட்ட
பேயைச் சிநேகித்து இக்கோலம் ஆகினேன் யேசுநாதா!
புத்தி யில்லாத மிருகம்போல் ஆயினேன் யேசுநாதா! – மனம்
போன வழியெல்லாம் போய் அலைந்தேங்கினேன் யேசுநாதா!
சித்தம் வைத்தென் பேரில் திருக்கடைக் கண்ணோக்கி யேசுநாதா! – உன்தன்
சீர்பதம் சாஸ்தவம் சேவை புரியச் செய் யேசுநாதா!

ஆதாம் சேத்தைப் பெற்றபின், எண்ணூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

ஆதியாகமம் | Genesis: 5: 4

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version