ஆச்சரியமான காட்சியை – Aatchariyamaana Kaatchiyai

ஆச்சரியமான காட்சியை – Aatchariyamaana Kaatchiyai

ஆச்சரியமான காட்சியைப் பார்க்கலாம், வா ஆ! கல்
வாரிச் சிலுவையில் வானவன் தொங்குகின்ற
ஆச்சரியமான காட்சியைப் பார்க்கலாம், வா

அனுபல்லவி

குட்சமுறு தேவ சாட்சியாங் கற்பனை
துய்யத்தை நார்மீறி – மகா
தூர்குணப் பேயின் தந்திரத்தினால்
தூய்மை விட்டனர், வாய்மை கெட்டனர்
சுத்தகிறிஸ்தரசன் – தேவனுட
சித்தன், அமைசிரசன், மாந்தர்களின்
துன்பத்தைப் போக்கவும், இன்பத்தைச் சேர்க்கவும்
தோஷஞ் செய்பாதகன் வேஷமாய்த் தொங்குகின்ற – ஆச்சரிய

சரணங்கள்

1. எருசலைநகர் மருவுங் கல்வாரி
என்னப்பட்ட ஒரு மேடு; – அதில்
ஏசுக்கிறிஸ்தெனும் நேசமகத்துவன்
எங்களுக்காய்ப்படும் பாடு – மரக்
குருசில் ஏறியே சிரசில் முண்முடி
கொண்டதும் நொந்ததும் நீடு – அப்போ
கொற்றவன் தன் முகம் சற்றேனுங் காட்டாத
குறையதும் ஒருபீடு;
குருதி வடியவே, சுருதிமுடியவே
பருதி மறையவே, திரையுங் கிழியவே,
கொலைஞர் அவமதிக்க, – துஷ்டனாம்
அலகை மனங்கொதிக்க, கசப்புடன்
கோனே, என்னை நீர் ஏனோ கைவிட்டீர்?
கொடுக்கிறேன் ஜீவனை, எடுத்திடு மென்றழும்

2. பூலோகத்தாரே, இம்மேலான காட்சியின்
புண்ணியத்தை வந்து பாரும், – தேவ
புத்திரன் பக்கத்தில் குத்துண்டு பாய்கின்ற
புனித ரத்தமும் நீரும் – நமை
மேலோகஞ் சேர்க்கின்ற சாலக்கிருபையின்
விஸ்தார ஊற்றென்று சேரும்; – அதில்
விழுந்து ஆத்மம் முழுகிப் பாவந் தீ
வினை அகன்றிட வாரும்,
சீலமற்ற மாந்தர் கோல முற்ற வேந்தர்
ஜீவனதிபதி சாவினாலே நம்மைத்
தெய்வ லோகஞ் சேர்க்க – நித்தியமாய்
உய்யும் சுத்தோராக்கக் -தேவ சுதன்
செல்வக் கிறிஸ்தந்தக் கல்வாரி மேட்டினில்
ஜீவன் துடிக்கத்தம் ஆவி விடுகின்ற


Aatchariyamaana Kaatchiyai Paarkkalaam Vaa Aa
Kalvaari Siluvaiyil Vaanavan Thongukintra
Aatchariyamaana Kaatchiyai Paarkkalaam Va

Kutchamuru Deva Saatchiyaam Karpanai
Thuiyaththai Narar Meeri Magaa
Thoor Guna Peayin Thanthiraththinaal
Thooimai Vittanar Vaaimai Keattanar
Suththa Kiristharasan Devanuda
Siththan Amaisirasan Maantharkalin
Thunbaththai Pokkavum Inbaththai Searkkavum
Thosam Seipaathagan Veashamaai Thongukintra

1.Erusalai Nagar Maruvum Kalvaar
Ennappatta Oru Meadu Athil
Yeasu Kiristhennum Neasa Magaththuvan
Engalukkaai Padum Paadu
Mara Kurusil Yeariyae Sirasil Munmudi
Kondathum Nonthathum Needu Appo
Kottravan Than Mugam Sattenum Kaattatha
Kuraiyathum Oru Peedu
Kuruthi Vadiyavae Suruthi Mudiyavae
Paruthi Maraiyavae Thiraiyum Kiliyavae
Kolaingar Avamathikka Thustanaam
Alagai Manam Kothikka Kasappudan
Konae Ennai Neer Yeano Kai vitteer
Kodukkirean Jeevanai Eduththidu Mentralum

2.Poologaththaarae Immealana Kaatchiyin
Punniyaththai Vanthu Paarum Deva
Puththiran Pakkaththil Kuththundu Paaikintra
Punitha Rathamum Neerum Namai
Mealogam Searkintra Saala Kirubaiyin
Visthaara Ootrentru Searum Athil
Vilunthu Aathmam Mulugi Paavam
Theevinai Agantrida Vaarum
Seelamattra Maanthar Kola Muttra Veanthar
Jeevanathipathi Saavinaalae Naamai
Deiva Logam Searkka Niththiyamaai
Uiyyum Suththorakka Deva suthan
Selva Kiristhantha Kalvaari Meattinil
Jeevan Thudikaththam Aavi Vidukintra

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version