சிலுவையின் நிழலில் உறைந்திடும் – Siluvaiyin Nizhalil Urainthidum

Deal Score0
Deal Score0

சிலுவையின் நிழலில் உறைந்திடும் – Siluvaiyin Nizhalil Urainthidum

சிலுவையின் நிழலில்
உறைந்திடும் ஈரம்
சுமந்திடும் தோள்கள்
கலங்கிடும் நேரம்
சிலுவையின் நிழலில்
உறைந்திடும் ஈரம்
சுமந்திடும் தோள்கள்
கலங்கிடும் நேரம்
யார் செய்த குற்றமோ
இந்த குருதியின் சீற்றமோ
ஏன் இந்த மரணமோ
மனம் கசந்திடும் தருணமோ
உதிர்ந்திடும் கண்ணீர் துளிகள்
உதிரா பூக்கள் வலிகள்
எப்போது மனிதம் உணரும்
சிலுவையில் பூக்கள் மலரும்

காற்றையும் கடலையும் அடக்கிய தேவன்
சிலுவையில் மௌனம் ஏனோ
குருடரை திருடரை நேசித்து மன்னித்ததாலோ

பாவியை பகைவரை ஏற்றுகொண்டதலோ இந்த
பாவ சிலுவையின் பாரம்
சுமக்கின்ற பழியோ
யார் செய்த குற்றமோ
இந்த குருதியின் சீற்றமோ
ஏன் இந்த மரணமோ
மனம் கசந்திடும் தருணமோ

கறைகள் படிந்த கதையில்
நாமோ கள்வராகினோம்
விதியால் பாவ வாழ்வில்
நாமோ சாட்டையாகினோம்

ரத்தப்பழியில் நாளும்
பாணம் பண்ணினோம்
அந்த முள்முடி சிரசில் இன்னும்
கூர்மையாகினோம்

யார் செய்த குற்றமோ
இந்த குருதியின் சீற்றமோ
ஏன் இந்த மரணமோ
மனம் கசந்திடும் தருணமோ

சிலுவையின் நிழலில்
உறைந்திடும் ஈரம்
சுமந்திடும் தோள்கள்
கலங்கிடும் நேரம்
சிலுவையின் நிழலில்
உறைந்திடும் ஈரம்
சுமந்திடும் தோள்கள்
கலங்கிடும் நேரம்
யார் செய்த குற்றமோ
இந்த குருதியின் சீற்றமோ
ஏன் இந்த மரணமோ
மனம் கசந்திடும் தருணமோ
உதிர்ந்திடும் கண்ணீர் துளிகள்
உதிரா பூக்கள் வலிகள்
எப்போது மனிதம் உணரும்
சிலுவையில் பூக்கள் மலரும்
எப்போது மனிதம் உணரும்
சிலுவையில் பூக்கள் மலரும்

Siluvaiyin Nizhalil Urainthidum good Friday song lyrics

    godsmedias
        Tamil Christians songs book
        Logo