Seeyon Kumararae song lyrics – சீயோன் குமாரரே
Seeyon Kumararae song lyrics – சீயோன் குமாரரே
சீயோன் குமாரரே
நம் தேவனில் களிக்கூறுங்கள்
தக்கபடி நமக்கு பலனளிக்கும்
அந்த ராஜாவை உயர்த்திடுங்கள்
துதியினால் ஓர் சிங்காசனம் அமைப்போம்
இயேசு ராஜாவை உயர்த்தியே ஆராதிப்போம்
மகிமை… உன்னதத்தில் உயர்ந்தவரே
மகிமை… சர்வத்திலும் வல்லவரே
1)கதறி அழுத கண்ணீரெல்லாம்
துருத்தியில் அல்லவோ வைத்திருநதார்
பாடுகள் நடுவே நடந்த நாட்களை
மகிமையாகத்தான் மாற்றிவிட்டார்
கிருபையாலே அலங்கரித்து
மகிமையாலே முடிசூட்டினார்
2)இழந்து போன ஆதி அனுபவம்
மீண்டும் நமக்குள்ளாய் துவங்கச்செய்வார்
ஜெபத்தின் ஆவியை பலமாய் அனுப்பி
நம்மை மறுரூபமாக்கிடுவார்
இதுவரை இல்லாத மாற்றம்
நமது எல்லையில் தோன்றச்செய்வார்
3)வெட்டுக்கிளிகளும் பச்சைப்புழுக்களும்
பட்சித்ததை திரும்பவும் தந்திடுவார்
சம்பூரணமாய் திருப்த்தியடைந்து
மகிழ்ந்துதுதித்திட செய்திடுவார்
களங்களில் தானியமும்
திராட்சைரசமும் புரண்டோடுமே
4)இருளில் வாழும் ஜனங்கள் எல்லாம்
வெளிச்சம் நோக்கியே விரைந்திடுவார்
சபைகள் எல்லாம் சீர்பொருந்தி
சாட்சியாகவே மகிமைப்படும்
கேதாரின் ஆடுகள் பலிபீடம் ஏறும்
இரட்சிப்பின் வாசனை எங்கும் வீசும்
Seeyon Kumararae Tamil Christian Song lyrics