Sarva Vallamai Ulla Devan song lyrics – சர்வ வல்லமை உள்ள தேவன்
Sarva Vallamai Ulla Devan song lyrics – சர்வ வல்லமை உள்ள தேவன்
சர்வ வல்லமை உள்ள தேவன் இவர்
சகலமும் படைதிட்ட சிருஷ்டிக் கர்த்தர்
அவரே நமது தேவன்
என்றும் அவரின் ஆடுகள் நாம்.
இந்த தேவன் என்றென்றுமுள்ள சதாகாலமும் நமது தேவன்
மரணம் வரையில் நம்மை நடத்திடுவார்
மறுமையில் மறுபடி எழுப்பிடுவார்
காலை மாலை எவ்வேளையிலும் அவரைக் கருத்துடன் துதித்திடுவோம்
சபையில் ஒன்றுகூடி உயர்த்திடுவோம்
சகலமும் அவரென்று பணிந்திடுவோம்.
யாக்கோபாக வாழ்ந்த நம்மை இஸ்ரயேலாய் மாற்றினாரே
யெஷூரன் என்று சொல்லி அழைத்திட்டாரே
எப்போதும் நம்மோடு இருக்கின்றாரே