salomin raaja – சாலேமின் ராசா
சாலேமின் ராசா, சங்கையின் ராசா
1. சாலேமின் ராசா, சங்கையின் ராசா, ஸ்வாமி, வாருமேன் – இந்தத்
தாரணிமீதினில் ஆளுகை செய்திடச் சடுதி வாருமேன் — சாலேமின்
2. சீக்கிரம் வருவோமென்றுரைத்துப்போன செல்வக்குமாரனே – இந்தச்
சீர்மிகும் மாந்தர்கள் தேடித்திரிகின்ற செய்திகேளீரோ? — சாலேமின்
3. எட்டி எட்டி உம்மை அண்ணாந்து பார்த்துக் கண்பூத்துப் போகுதே – நீர்
சுட்டிக்காட்டிப்போன வாக்குத்தத்தம் நிறைவேறலாகுதே — சாலேமின்
4. நங்கை எருசலேம்பட்டினம் உம்மை நாடித்தேடுதே – இந்த
நானிலத்திலுள்ள ஜீவப்பிராணிகள் தேடிவாடுதே — சாலேமின்
5. சாட்சியாகச் சுபவிசேஷம் தாரணிமேவுதே – உந்தச்
சாட்சிகளுடைய இரத்தங்களெல்லாம் தாவிக் கூவுதே — சாலேமின்
salomin raaja – சாலேமின் ராசா – Salemin Raja -Salamin Raja lyrics
- Ulagin Meetparae – உலகின் மீட்பரே
- ஆபிரகாமின் தேவன் – Abrahamin Devan Eesaakkin Devan
- அப்பா அப்பா இயேசு அப்பா – Appa Appa Yesu Appa
- இணை இல்லாத தேவனாம் – Inai Illaa Dhevan
- எத்தனையோ நன்மைகள் – Yethanayo Nanmaihal
அவன் எடுக்கப்பட்ட மண்ணைப் பண்படுத்த தேவனாகிய கர்த்தர் அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிட்டார்.
Therefore the LORD God sent him forth from the garden of Eden, to till the ground from whence he was taken.
ஆதியாகமம் | Genesis: 3: 23