Rajadhi rajan Yesu song lyrics – ராஜாதி ராஜன் ஏசு
Rajadhi rajan Yesu song lyrics – ராஜாதி ராஜன் ஏசு
ராஜாதி ராஜன் ஏசு
வானம் ஏறி வருவார்
தாகம் கொண்ட எவரும்
தந்தை கூட வாழ்வார்
உணர்ந்திடு உறங்காதே –
இயேசு வருகின்றார் உறங்காதே.
காலத்தின் சம்பவங்கள் எல்லாம்
இயேசு வரும்போது தெறித்தோடிடும்
காத்திரு என் மனமே – இயேசு
காந்தம் போலே வருவார்
உணர்ந்திடு உறங்காதே –
இயேசு வருகின்றார் உறங்காதே.
வார்த்தைகள் தந்த நாதன்
வாக்கு மாறாதவர் என்றும்
வாசல் தேடி வருவார்
வானம் மீது வருவார்
உணர்ந்திடு உறங்காதே –
இயேசு வருகின்றார் உறங்காதே.
கானாவூர் கல்யாணம் போல
அதிசயம் நிகழ்த்திட வருவார்
கலங்கிடாதே நீ மனமே
காவல் தெய்வமாய் வருவார்
உணர்ந்திடு உறங்காதே –
இயேசு வருகின்றார் உறங்காதே.