Pottruvom Pugaluvom Nandri kooruvom song lyrics – போற்றுவோம் புகழுவோம் நன்றி
Pottruvom Pugaluvom Nandri kooruvom song lyrics – போற்றுவோம் புகழுவோம் நன்றி
போற்றுவோம் புகழுவோம் நன்றி கூறுவோம்
துன்பத்தில் துணையான தூய தேவனை
தூய்மையின் பொருளான இனிய நேசனை
அகிலத்தைக் காத்திடும் அன்பு தேவனை
அனைத்தையும் ஆண்டுவரும் இனிய நேசனை
நோயில் மருந்தான மகிமை தேவனை
நாவினில் நின்றாடும் இனிய நேசனை
தீயவன் தீக்கனைகளை எதிர்த்த தேவனை
தியாகத்தில் ஒளியான புனித நேசனை
அகத்தினில் அன்பான அருமை தேவனை
அமைதிக் கடலான கருணை நேசனை
என்றும் எம்மில் வாழும் இயேசு தேவனை
எல்லாம் இனிதாக்கும் எளிமை நேசனை
நன்மையின் நாயகனாம் நல்ல தேவனை
நலமாய் நமைத்தாங்கும் நல்ல நேசனை
உள்ளத்தில் உறைந்திடும் உண்மை தேவனை
உலகின் ஒளியாக எழுந்த நேசனை
Tamil Christian Bhajan