Pottri Ummai Pugalukirean song lyrics – போற்றி உம்மை புகழுகிறேன்
Deal Score0
Shop Now: Bible, songs & etc
Pottri Ummai Pugalukirean song lyrics – போற்றி உம்மை புகழுகிறேன்
போற்றி உம்மை புகழுகிறேன்
வாழ்த்தி உம்மை வணங்குகிறேன்
ஆவியோடும் உண்மையோடும்
ஆண்டவர் உம்மைத் தொழுகின்றேன்
- உன்னத தேவனே உயர்த்துகிறேன்
வல்லமை தேவனே வணங்குகிறேன்
பரிசுத்தமுள்ள தேவன் உம்மை (2)
பலிகள் செலுத்தி தொழுகின்றேன் – (போற்றி) - மகிமை மாட்சிமை நிறைந்தவரே
மகிழ்ச்சியுடனே தொழுகின்றேன் (2)
துதிகள் மத்தியில் வாசம் செய்யும்
தூயவர் உம்மை துதிக்கின்றேன் – (போற்றி) - என்னுயிர் காக்க தன்னுயிரை
தானமாய் தந்த தெய்வம் நீரே
எந்நாளும் மாறா இயேசு தேவா (2)
விண்ணாளும் உம்மைத் துதிக்கின்றேன் – (போற்றி)