Ondrumilla Nerathilae – ஒன்றுமில்லா நேரத்திலே

Deal Score0
Deal Score0

Ondrumilla Nerathilae – ஒன்றுமில்லா நேரத்திலே

ஒன்றுமில்லா நேரத்திலே
துணையாக வந்தீரே என் இயேசுவே
கரங்களை பிடித்து என்னை உயர்த்தினீர்
காயங்கள் ஆற்றி என்னை தேற்றினீர்
மாம்சமான சரீரம் உடைந்தபோதிலும்
மீட்டெடுக்க வந்தீரே பிரியமாகவே
மார்போடு அணைத்து என்னை மன்னித்தீர்
கண்ணீரை துடைத்து என்னை தழுவினீர்(2)

என் தெய்வமே என் நண்பனே
உம்மை தவிர எனக்கு யாருண்டு
என் அழகே என் உயிரே
உம்மை தவிர எனக்கு யாருண்டு

உள்ளிந்திரியங்களைகை கொண்டு இருக்கிறீர்
தாயின் கர்ப்பத்தில் என்னை காப்பற்றினீர்
அதிசயமாக உருவாக்கினீர்
ஆச்சரியமாக வழி நடத்தினீர்
உம்மையே எப்பொழுதும் சார்ந்திருப்பேன்
வாக்குமாறாதவர் என் தந்தையே
முழு உள்ளத்தோடும், பெலதோடும்
முழு மனதோடும் சிந்தையோடும் (2)

என் இயேசுவே என் கிருபையே
உம்மை தவிர எனக்கு யாருண்டு
என் சுவாசமே என் மீட்பரே
உம்மை தவிர எனக்கு யாருண்டு

பெயர் சொல்லி அழைத்தீரே என் தேவனே
பாசகரத்தினாலே அரவணைத்தீரே
குப்பையிலிருந்து என்னை சுமந்துகொண்டீர்
குறையில்லாமல் என்னை பராமரித்தீர்
தயவுள்ள கரங்களினாலே மீட்டெடுத்தீரே
அப்பா பிதாவே என்றும் அழைக்கச் செய்தீரே
உம் கிருபையினாலே, அன்பினாலே
உம் சிலுவையினாலே, இரக்கத்தினாலே (2)

என் ராஜனே என் ஆசையே
உம்மை தவிர எனக்கு யாருண்டு
என் இதயமே என் ஆருயிரே
உம்மை தவிர எனக்கு யாருண்டு

Ondrumilla Nerathilae song lyrics in English

Ondrumillaa nerathilae
1.Ondrumillaa nerathilae
Thunaiyaaga vandeerae en Yesuve
Karangalai pidithu Ennai uyarthineer
Kaayangal aatri Ennai Thetrineer
Maamisamaana sareeram udaindhapodhilum
Meetedukka vandeerae piriyamaagavae
Maarbodu anaithu ennai mannitheer
Kanneerai thudaithu ennai thazhuvineer 2

Cho: En deivamae En Nanbanae
Ummai thavira enakku yaarundu
En azhagae En uyirae
Ummai thavira enakku yaarundu

2.Ulllinthiriyangalaikai kondirukireer
Thaayin karpathil ennai kaapatrineer
Adhisayamaaga uruvaakineer
Aachariyamaaga vazhi nadathineer
Ummaiyae eppozhudhum saarndhirupaen
Vaakumaaradhavar en Thandhaiyae
Muzu ullathodum belathodum
Muzu manadhodum sindhaiyodum 2

Cho: En yesuvae En Kirubhaiyae
Ummai thavira enakku yaarundu
En swasamae En meetparae
Ummai thavira enakku yaarundu

3.Peyar solli azhaitheerae en Devanae
Paasakarathinaalae aravanaitheerae
Kuppaiyilirundhu ennai sumandhukondeer
Kurayillamal ennai paraamaritheer
Dhayavulla karangalinaalae meetedhutheerae
Appa pidhaavae endrum azhaikka seitheerae
Um kirubhaiyinaalae, Anbinaalae
Um siluvaiyaanalae, irakkathinaalae 2

Chorus
En Raajanae En aasaiyae
Ummai thavira enakku yaarundu
En Idhayamae En aaruyirae
Ummai thavira Ennaku Yaarundu

Ondrumilla Nerathilae Tamil Christian Worship Song Lyrics, Tune & Sung by Sushil Joseph

godsmedias
      Tamil Christians songs book
      Logo