Ninayatha Neram entru song lyrics – நினையாத நேரம் என்று
Ninayatha Neram entru song lyrics – நினையாத நேரம் என்று
நினையாத நேரம் என்று
எனக்கில்லை உந்தன் நினைவில்….
குறையாத நேசம் ஒன்று
எனக்குண்டு உந்தன் நெஞ்சினில்…
எதற்காகவே இந்த அன்பு…
எனை தாங்கிடும் தாயின் அன்பு…
வழி மாறியும் மாறா அன்பு…
பரம் சேர்த்திடும் சிலுவை அன்பு…
உந்தன் அன்பை பாட…
இணை ஒன்றும் இல்லையே…(நினையாத)
உதட்டுக்குள் மூடிருக்கும்
ஜெபங்களும் உமக்கு கேட்கும்
கண்ணீர் துளியில் தேங்கி நிற்கும்
ரணங்களும் உமக்கு புரியும்
கேட்கும் உந்தன் செவி இரண்டும்
ஆற்றும் ரணம்…மனம் முழுதும்
விரல் நுனியில் மறைந்திருக்கும்
விசுவாசம் உமக்கு தெரியும்…
வறுமையில் கொடுத்த அளவின்
நிறைவுகள் உமக்கு புரியும்
பார்க்கும்… உந்தன் விழி இரண்டும்
தேற்றும்… நலம் வளம் அருளும்
கீழே விழுந்த துணிக்கைகளில்
வேற்றுமையை உடைத்து சென்றீர்
தள்ளி நின்ற நேரங்களில்
தண்ணீர் தந்து சேர்த்துக்கொண்டீர்
செய்த அத்தனை நன்மையும்
எனை நினைத்தே (நினையாத)