Neerae Aalayam song lyrics – நீரே ஆலயம்
Neerae Aalayam song lyrics – நீரே ஆலயம்
நீரே ஆலயம், நீரே ஆலயம்
குழந்தை இயேசுவே
நீரே ஆலயம்
பயணங்கள் தொடரும் பக்தர்கள் கோடி பரமன் சந்நிதியில்
மாற்றங்கள் அபையும் மாசுகள் மறையும் மன்னவன் சந்நிதியில்
- அகிலம் ஆளும் ஆதவா, அடைக்கலம் தந்த ஆண்டவா
ஆசைகள் சுமந்தோம் நெஞ்சிலே, ஆறுதல் தேடி உன்னிலே
ஆர்வமற்ற எங்கள் உள்ளம் அன்பு தீயால் ஆள வந்தாய்.
அற்புதங்கள் கண்டவுடன் அண்டிவந்து சரணடைந்தோம் - புனிதம் மறைந்த போதிலே புதுமை புரிந்தாய் பாலனே
மனதில் நோய்கள் தாங்கியே வதனம் வந்தேன் நாடியே
ஆழமுள்ள அன்பினிலே உந்தன் சுகம் எம்மில் கண்டோம்
அற்புதங்கள் கண்டவுடன் அண்டிவந்து சரணடைந்தோம்