
Neer Sollum Adiyean – நீர் சொல்லும் அடியேன்
நீர் சொல்லும் அடியேன் கேட்கிறேன்
நீர் காட்டும் பாதையில் நடப்பேனே
சத்தம் கேட்டு சித்தம் செய்ய
தருகிறேன் என்னை முழுமையாய்
ஜீவன் தரும் உம் வார்த்தையால்
நிலைநிறுத்தும் என் வாழ்விலே
பெலவீனன் ஆன என்னை
பெலப்படுத்தும் உம் வார்த்தையால்
வறட்சிகள் பசுமையாக்க
உம் வார்த்தையை விதைத்திட்டுமே
– நீர் சொல்லும்
மறுதலித்தேன் அறியேன் என்றேன்
துணிகரமாய் பாவம் செய்தேன்
இரக்கத்தில் ஐசுவரியரே
என்னை விட்டு விலகாதவர்
இருள் எல்லாம் நீக்கினீரே
உமக்காய் என்றும் ஒளிவீசுவேன்
– நீர் சொல்லும்