Narcheythi Deepangal Nenjinil song lyrics – நற்செய்தி தீபங்கள் நெஞ்சினில்

Deal Score0
Deal Score0

Narcheythi Deepangal Nenjinil song lyrics – நற்செய்தி தீபங்கள் நெஞ்சினில்

நற்செய்தி தீபங்கள் நெஞ்சினில் ஏற்றுங்கள்
நல்லவர் இயேசுவைப் போற்றுங்கள்
நம்பிக்கை வார்த்தைகள் எங்கெங்கும் சொல்லுங்கள்
வல்லவர் நாமத்தில் கூடுங்கள்
நம் விழியும் வழியும் இயேசென்போம்
நம் வாழ்வும் வளமும் அவரென்போம்

விடுதலைச் செய்தியினை சங்காக முழங்கி
வேதனைப் படுவோர்க்கு ஆறுதல் வழங்கி
பார்வையற்றோருக்குப் பார்வையாய் இருந்து
பாதமற்றோர் செல்ல பாதையாய் மாறி

வாழ்விழந்தோர் வாழ்ந்திட வழியாக
வலிமையற்றோர் மிக வலிமை பெற்றிடவே
நலமிழந்தோர் நலம்பெற்று மகிழ்ந்திட
நலிவடைந்தோர் நிமிர்ந்திடவே நாளும்

ஒடுக்கப்பட்டோர் உயர்ந்திடவே அனலாய்
நசுக்கப்பட்டோர் உயிர்த்திடவே கனலாய்
சிறையிருப்போர் மகிழ்ந்திடவே கனிவாய்
எளியவர் வாழ்வு மலர்ந்திட விரைவோம்

Jeba
      Tamil Christians songs book
      Logo