Nambikkai Izhakkavillai Nangal song lyrics – நம்பிக்கை இழக்கவில்லை நாங்கள்
Nambikkai Izhakkavillai Nangal song lyrics – நம்பிக்கை இழக்கவில்லை நாங்கள்
நம்பிக்கை இழக்கவில்லை நாங்கள்
தேவபர்வதம் சேருவோம்
வாக்குகள் பல தந்து
வாழ்க்கை பயணத்தில் உடன்வருவீர்
நட்டாத தோட்டங்களும்
வெட்டா துரவுகள் தந்திடுவீர்
ஏசேக்கு சித்தனா இல்லை
ரெஹோபோத் எனக்கு உண்டு
வனாந்திர பாதைதனை
சீக்கிரமாக கடக்க செய்வீர்
எம்பிதாக்கள் கண்டிராத
மன்னாவால் போஷிக்கும் தெய்வம் நீர்
தேசத்தின் பலனை தந்து
சொன்னதை நிறைவேற்றுவீர்
தகப்பன் போல் சுமந்துகொண்டு
கண்மணி போல காத்துவந்தீர்
கழுகைப்போல் செட்டையின்மேல்
உயர் ஸ்தானங்கள் கொண்டு செல்வீர்
கன்மலை தேனும் தந்து
கற்பாறை எண்ணெய் தருவீர்
அறியாத வழியினிலே
குருடன் என்னை நடத்திவந்தீர்
தெரியாத பாதையிலும்
தைரியமாக நடக்கசெய்தீர்
கைவிடவே மாட்டீர்
கோணலை செவ்வையாக்குவீர்
Nambikkai Ilakkavillai Naangal Melaana Anbu songs