
நம் தேவனைத் துதித்துப்பாடி – Nam Devanai Thuthithu Paadi Lyrics
நம் தேவனைத் துதித்துப்பாடி – Nam Devanai Thuthithu Paadi song Lyrics
நம் தேவனைத் துதித்துப்பாடி
அவர் நாமம் போற்றுவோம்
களிகூர்ந்திடுவோம் அகமகிழ்ந்திடுவோம்
துதி சாற்றிடுவோம் புகழ் பாடிடுவோம்
அவர் நாமம் போற்றுவோம்
1. நம் பாவம் யாவும் நீக்கி மீட்டார்
அவர் நாமம் போற்றுவோம்
துன் மார்க்க வாழ்வை முற்றும் நீக்கி
அவர் நாமம் போற்றுவோம் – களி கூர்
2. மெய் ஜீவ பாதை தன்னில் சென்று
அவர் நாமம் போற்றுவோம்
நல் ஆவியின் கனிகள் ஈந்து
அவர் நாமம் போற்றுவோம் – களி கூர்
3. மேலோக தூதர் கீதம் பாடி
அவர் நாமம் போற்றுவோம்
பேரின்ப நாடு தன்னில் வாழ
அவர் நாமம் போற்றுவோம் – களி கூர்